ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும வகைகள் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றவாறு ஃபேஸ் பேக் உபயோகப்படுத்தினால் தான் அதனுடைய முழுமையான பலனையும் பெற முடியும். அதை அறியாமல் அனைவரும் அனைத்து ஃபேஸ் பேக்களையும் உபயோகப்படுத்தும் பொழுது அதனால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அனைத்து சருமமும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அற்புதமான பொருளை வைத்து ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றவாறு அந்த சருமத்தில் இருக்கக்கூடிய பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நாம் பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் நம் முகம் பிரகாசமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும் எந்த சருமத்திற்கு எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவது என்பது தெரியாமல் கஷ்டப்படுவோம். எந்த வகையான சருமத்தை சேர்ந்தவர்களும் இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தலாம். அப்படி உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு உதவி செய்கிறது என்று தான் கூற வேண்டும்.
இதற்காக நாம் அதிகமாக சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு பொடி மட்டும் நம்மிடம் இருந்தாலே போதும். கேரளாவில் இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் உபயோகப்படுத்துவார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேதத்தில் அனைத்து அழகு சாதன பொருட்களிலும் இந்த ஒரு பொருள் கண்டிப்பாக முறையில் சேர்ந்திருக்கும். அதுதான் அஸ்வகந்தா. இந்த பொடியில் ஆன்டி இன்ஃப்ளமேசன் ஆன்டி ஆக்சைடு என்று நம் முகத்திற்கு பாதுகாப்பு தரக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்து இருக்கிறது.
முகத்தில் எப்பேர்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தையுமே இது படிப்படியாக நீக்க வல்லது. அது மட்டுமல்லாமல் எந்த வகையான முகச் சருமமாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் இது பொருந்தும் என்பது தான் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் உபயோகப்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக தான் இந்த அஸ்வகந்தா பொடி திகழ்கிறது.
ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அஸ்வகந்தா பொடியை சேர்த்து அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். இதை படுக்கச் செல்வதற்கு முன் உபயோகப்படுத்தினால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும். 20 நிமிடம் கழித்து குளித்த நீரினால் கழுவி விட வேண்டும். எண்ணெய் சருமம் மிகுந்தவர்களும் பருக்கள் அதிகமாக இருப்பவர்களும் தயிருக்கு பதிலாக பன்னீரையோ அல்லது சாதாரண சுத்தமான தண்ணீரையோ உபயோகப்படுத்தலாம்.
இதை மட்டும் மாற்றிக் கொண்டாலே போதும். இந்த பொடியை நம் முகத்தில் உபயோகப்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகள், முகப்பருக்கள், வடுக்கள், கரும்புள்ளிகள் என்று அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி கேரளத்து பெண்கள் எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இளமையை பெற்றுத்தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதையும் படிக்கலாமே: மருதாணி நன்றாக சிவக்க டிப்ஸ்
இந்த ஒரு பொருளை மட்டும் அன்றாடம் நாம் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருவதன் மூலம் நம் முகத்தில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் முகம் என்றும் இளமையுடனும் பிரகாசத்துடனும் பொலிவுடன் திகழும்.