காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியில் இந்த பொருளை வைத்து தீபம் ஏற்றினால், அந்த விளக்கில் அம்பாள் மனம் விரும்பி அமர்ந்து கொள்வாள்.

kamatchi-amman-vilaku
- Advertisement -

பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் நிச்சயமாக தினம்தோறும் காமாட்சி அம்மன் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பழக்கம் இருக்கும். இந்த உலகத்தின் நன்மைக்காக இந்த உலகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஊசி முனையில் நின்று, நெருப்பில் நின்று காமாட்சி அம்மன் தவம் மேற்கொண்டதாக ஒரு ஐதீகம் உண்டு. நம்முடைய நன்மைக்காக தன்னை வருத்திக்கொண்டு தவமிருந்த காமாட்சி அம்மனை தினம் தோறும் வீட்டில் நினைத்து வழிபாடு செய்தோமே ஆனால், அந்த வீட்டில் வறுமை இருக்காது. அந்த வீட்டை சுபிட்சமாக பார்த்துக் கொள்ளும் வேலையை காமாட்சியம்மன் பார்த்துக் கொள்வாள். இது நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை.

kamakshi vilakku

இதனால் தான் இந்து சாஸ்திரப்படி, எல்லோர் வீட்டிலும் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து வழிபாடு செய்கின்றோம். உங்களுடைய வீட்டில் பித்தளையில் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து வழிபாடு செய்தாலும் சரி தான், அல்லது வெள்ளியில் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து வழிபாடு செய்தாலும் சரி தான். அந்த விளக்கினை எந்த முறைப்படி நம் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வைத்தால், எந்த பொருளை காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியில் வைத்தால், நம் வீட்டிற்கு அந்த அம்பாள் வருகை தருவாள் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கை எப்போதும் தரையில் வைத்து ஏற்றக் கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது அலமாரியில் வைத்து காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றினாலும், அந்த காமாட்சி அம்மன் விளக்கு அடியில் ஒரு சிறிய தட்டு இருக்க வேண்டும். இது சரியான ஒரு விஷயம் தான். பெரும்பாலும் இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். அம்மனை தரையில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது ஏதாவது ஒரு சிம்மாசனத்தின் மீது தான் அமர வைக்க வேண்டும்.

kamatchi-amman5

அந்த சிம்மாசனத்தை நாம் இன்னும் கொஞ்சம் மங்களகரமாக மாற்ற போகின்றோம். அவ்வளவு தான். முதலில் ஒரு தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசியில் மஞ்சள் தூளை கலந்து அட்சதையாக மாற்றிக்கொள்ளுங்கள். அந்த அட்சதையில் இருந்து சிறிதளவு எடுத்து இந்த தட்டின் மேல் பரப்பி வைத்துவிட்டு, அதன் பின்பு காமாட்சி அம்மன் விளக்கினை அச்சத்தையின் மேல் வைத்து, எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க தொடங்கும். எப்போதும் காமாட்சி அம்மன் விளக்குக்கு பக்கத்தில் வாசனை நிறைந்த பூவை வைத்துவிடுங்கள்.

- Advertisement -

காமாட்சி அம்மனுக்கு நாம் வைத்திருக்கக்கூடிய சிம்மாசனம் பச்சரிசியும் மஞ்சளும். நம்முடைய நலனுக்காக கஷ்டப்பட்ட காமாட்சி அம்மன் மனதை இதன் மூலம் நாம் குளிர வைத்து இருக்கின்றோம். இந்த முறைப்படி உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றினால் அந்த அம்பாளே மனம் இறங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில், நீங்கள் ஏற்றும் தீபத்தில் வந்து குடி கொள்வாள் என்பது ஒரு நம்பிக்கை.

kamatchi vilakku

உங்களுக்கு இறைவழிபாட்டின் மீது முழு நம்பிக்கை இருந்தால் உங்கள் வீட்டு காமாட்சியம்மன் தீபத்தை மேல் சொன்ன முறைப்படி ஏற்றலாம். இதனால் உங்களுடைய இல்லம் அம்மனின் அருளை முழுமையாகப்பெறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -