பிக்மெண்டேஷன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்களை முகத்தில் இருந்து உடனடியாக அகற்ற, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க! பெஸ்ட் ரிசல்ட் உடனே கிடைக்கும்.

face

பிக்மெண்டேஷன் என்பது சிலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடும். சிலருக்கு 30 வயதை கடந்த பின்பு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கருந்திட்டுக்கள் நம்முடைய முகத்தின் அழகை குறைவாக காண்பிக்கும். இதற்கு இயற்கையான முறையில் சுலபமாக, நம் வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பிக்மெண்டேஷன், முகத்தில் இருந்தால், முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அந்தப் கருந்திட்டுக்களின் மேல் எந்தவித அழுத்தத்தையும் நாம் கொடுக்கக்கூடாது.

face1

அதாவது தினமும் முகத்தை கழுவி விட்டு துண்டை வைத்து துடைத்தால் கூட, அழுத்தம் கொடுக்கவே கூடாது. எந்த அளவிற்கு கருந்திட்டுக்கள் மேல் அழுத்தம் கொடுக்கின்றோமோ, அந்த அளவிற்கு அது இன்னும் கருப்பாக அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஆக முகத்தில் கருப்பாக உள்ள பகுதிகளை சாஃப்ட்டாக தான் கையால வேண்டும்.

சரி, இதற்கு நிரந்தர தீர்வைத் தரும் ஒரு ரெமிடியை இப்போது பார்த்துவிடலாம். இந்த பிக்மெண்டேஷனை போக்க தேவையான பொருட்கள். அதிமதுரப் பொடி, ஆப்பிள் சீடர் வினிகர், புளிக்காத கெட்டி தயிர். அதிமதுரப் பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் நமக்கு கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆப்பிள் சீடர் வினிகர் எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் சுலபமாகவே இப்போது கிடைக்கின்றது.

ஒரு சிறிய கண்ணாடி பௌலில், 1 ஸ்பூன் அதிமதுரப் பொடி, 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கொண்டு, இதை பேஸ்டாக தயார் செய்யத் தேவையான அளவு தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல இதை கொண்டு வந்ததும், உங்களுடைய முகம் முழுவதும் ஒரு பேக் அப்ளை செய்து கொள்ளலாம். வெறும் 20 நிமிடங்கள் இது அப்படியே உங்களுடைய முகத்தில் இருக்கட்டும்.

அதன் பின்பு குளிர்ந்த நீரைக் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவி விடுங்கள். கவனம் இருக்கட்டும். முகம் கழுவிய பின்பு, துண்டை வைத்து அழுத்தி எல்லாம் துடைக்கக் கூடாது. சொரசொரப்பான துண்டுகளை முகத்தில் பயன்படுத்தவே கூடாது. சாதாரண வெள்ளை நிற காட்டன் துண்டுகளை மட்டுமே உங்களுடைய முகத்தில் பயன்படுத்த வேண்டும்.

face-pack

முகத்தில் அதிமதுர பேக்கை போடுவதற்கு முன்பு, ஒரு காட்டன் பஞ்சில் காய்ச்சாத பாலை நினைத்து முகத்தை ஒருமுறை மென்மையாக துடைத்து சுத்தம் செய்து கொள்ள மறக்க வேண்டாம். இப்படியாக வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த பேக்கை போட்டு வந்தாலே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் இருக்கும் பிக்மெண்டேஷன் மறைந்துவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், உங்க வீட்ல நீங்க ட்ரை பண்ணி பாருங்க!