வருடத்தின் முதல் மாதமாக திகழக்கூடியதுதான் சித்திரை மாதம். சித்திரை மாதத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் அந்த வருடம் முழுவதுமே நமக்கு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது இந்த வருடம் முழுவதுமே நமக்கு அதிரடியான பண வரவு உண்டாகும், கடன் பிரச்சினை தீரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வெள்ளிக்கிழமை பரிகாரம்
ஒருவருக்கு பண வரவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழக்கூடியது. பணத்தை வைத்துதான் பலரும் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கு தேவையான பணவரவை தரக்கூடியவராக திகழ்பவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் பரிபூரணமான அருளை பெறுபவர்களுக்கு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான பண வரவும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக தான் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. வெள்ளிக்கிழமை அன்று 5 ரூபாயை வைத்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் எதிர்பாராத அளவிற்கு பணவரவு உண்டாகும். இதனால் நாம் கடனற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று இரவு வரக்கூடிய 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இருக்கும் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு இரண்டே இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். அவை தான் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஐந்து ரூபாய் நாணயம் மற்றும் சுக்கிரனின் அம்சம் பொருந்திய வெள்ளை சர்க்கரை.
இரவு எட்டு மணியில் இருந்து 9 மணிக்குள் மூடி போட்ட ஒரு சிறிய டப்பாவில் இரண்டு கைப்பிடி அளவு வெள்ளை சர்க்கரையை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு வலது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும், பண வரவு உண்டாக வேண்டும் என்ற வேண்டுதலை வைத்த பிறகு இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 15 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும்.
இவ்வாறு மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயத்தை டப்பாவில் வெள்ளை சர்க்கரை வைத்திருந்தோம் அல்லவா? அதற்குள் வைத்து விட வேண்டும். இந்த டப்பாவை பணம் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். சித்திரை மாதம் முடியும் நாள் அதாவது சித்திரை மாதத்தின் கடைசி நாள் மே மாதம் 14ஆம் தேதி சர்க்கரைக்குள் இருக்கக்கூடிய அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். சர்க்கரையை கால்படாத செடிகளின் ஓரத்தில் போட்டு விட வேண்டும். இந்த சர்க்கரையை எறும்புகள் தங்களுடைய உணவாக எடுத்துக் கொள்ளும்.
மந்திரம்
“ஸ்ரீம் ப்ரஜன்ய லக்ஷ்ம்யை நமஹ”
இதையும் படிக்கலாமேபுது வீடு கட்ட பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த ஐந்து ரூபாய் பரிகாரத்தை சித்திரை மாதத்தின் வெள்ளிக்கிழமை அன்று ஒருமுறை மட்டும் செய்து பாருங்கள். இந்த வருடம் முழுவதும் எதிர்பாராத அளவிற்கு பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.