நல்ல எதிர்காலம் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தக் கூடிய காட்சிகள்! இவையெல்லாம் உங்கள் கனவில் வந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

dream

யாராவது நம்முடைய முகத்தை பார்த்து உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று சொல்லி விட்டாலே போதும். அன்றைய நாள் முழுவதும் நம்முடைய சந்தோஷத்தை சொல்லுவதற்கு வார்த்தை இருக்காது. அதோடு மட்டுமல்லாமல், நம்முடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற அந்த நேர்மறை எண்ணமே, நம்மை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடும். உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய அந்த காட்சிகள் எவை, அதிர்ஷ்டத்தை தரக்கூடிய கனவுகள் எவை என்பதைப் பற்றி நீங்களும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் எதிரே பசுமாடோடு சேர்ந்த கன்று வந்தால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். வெளியே செல்லும் போது எதிர்பாராமல் வெள்ளை நிற பறவை  உங்களுடைய கண்களில் எதிர்ப் பட்டால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். சில பேருக்கு காலை எழுந்தவுடன் வெளியே சென்று இயற்கை காட்சியை ரசிக்க கூடிய பழக்கம் இருக்கும்.

அப்படி நீங்கள் காலை எழுந்ததும், உங்கள் வீட்டு ஜன்னல் பக்கத்திலோ அல்லது உங்கள் வீட்டு பால்கனியிலோ அல்லது உங்கள் வீட்டு வாசலுக்கு செல்லும்போது எதிர்பாராமல் உங்களுடைய கண்களில் வெள்ளை பறவை பறப்பது போல காட்சியைப் பார்த்தால் அன்றைய நாள் நீங்கள் எதிர்பாராத நல்லது உங்களுக்கு நடக்கும். குறிப்பாக கூட்டமாக வெள்ளை பறவை வானில் பறக்கக்கூடிய காட்சியை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் அந்த நாள் அதிர்ஷ்ட நாளாகத்தான் இருக்கும்.

white-bird

இதோடு மட்டுமல்லாமல் நிறை குடத்தோடு வரக்கூடிய சுமங்கலிப் பெண், தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு வரக்கூடிய தாய், இப்படிப்பட்ட பெண்கள் காலையில் நீங்கள் வெளியே செல்லும் போது எதிரில் வந்தாலும் அது உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய காட்சிகள் தான்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுடைய கனவில் எதை கண்டால் அதிஷ்டம் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். அலங்காரம் செய்யப்பட்ட பசுவும் கன்றும் கனவில் தோன்றினால் அது உங்களுக்கு எதிர்பாரத அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பசு மாட்டிலிருந்து யாரோ ஒருவர் பால் கரப்பது போல காட்சியை உங்களது கனவில் கண்டால், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

bird

அடுத்தபடியாக தேங்காய். ஒருவருடைய கனவில் இந்த தேங்காய் வந்தால் அது அவருக்கு மிக மிக நல்ல சகுனம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் காலையில் எழுந்து எதர்ச்சியாக நீங்கள் தேங்காயின் முகத்தில் விழிக்க கூடிய தருணங்கள் ஏற்பட்டால், அதுவும் உங்களுக்கு அதிரசத்தை கொடுக்கக் கூடிய விஷயம்தான்.

thengai-coconut

தினமும் உங்களுடைய வீட்டில் ஒரு முழு தேங்காயை வைத்துக்கொண்டு, காலை கண் விழிக்கும் போது அந்த தேங்காயில் கண் விழிப்பதும் நமக்கு சில நேரங்களில் சில அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே போல் கனவில் வெள்ளை நிற பாம்பினை பார்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் என்பது எப்போதுமே நாம் தேடிச் செல்லும் சமயத்தில் நமக்கு கிடைக்காது. நாம் எதிர்பாராத சமயத்தில், எதிர்பாராத தருணங்களில் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டத்தை யார் நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.