அதிர்ஷ்டத்தை தரும் தீபம்

mahalakshmi deepam
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். நாம் செல்வதற்கு முன்னே நம்முடைய துரதிஷ்டம் முன்னாடி சென்று விடும் என்றும் அதனால் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்ட துரதிஷ்டம் நம்மை விட்டு நீங்கவும், அதிர்ஷ்டம் நம்மை தேடி வரவும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய கர்ம வினைகளும் நீங்க வேண்டும். இப்படி கர்ம வினைகள் நீங்குவதற்கும் அதே சமயம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை இயன்றவர்கள் தினமும் செய்யலாம். இயலாத பட்சத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் செய்யலாம். அல்லது மாத பிறப்புகளில் செய்யலாம். இந்த தீபத்தை நாம் எந்த அளவிற்கு பயபக்தியுடன் ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும்.

நம்முடைய முன்னோர்கள் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று கூறுவார்கள் அல்லவா. அதைப்போல அந்த அதிர்ஷ்டமானது நாம் செய்யும் முயற்சி வழியாக நமக்கு அதிக அளவு பலனை தரும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு நெல்லிக்காய் வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நெல்லிக்காயில் தான் நாம் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

நமக்கு பணத்தேவை இருக்கிறது. அந்த பணத் தேவை பூர்த்தியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக இரண்டு நெல்லிக்கனிகளை எடுத்து வந்து அதன் மேல் பகுதியை மட்டும் சிறிது பள்ளம் ஆகிவிட்டு நெய்யில் ஊற வைத்திருக்கும் பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது ஒரே நெல்லிக்கனியில் இரண்டு திரிகளை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு திரி வடக்கு பார்த்தவாறு ஒரு திரி கிழக்குப் பார்த்தவாறு எரிய வேண்டும்.

சிறிது நேரம் எரிந்தால் கூட போதும். ஆனால் இந்த இரண்டு திரிகளையும் போட்டு நாம் ஏற்ற வேண்டும். இதுவே உங்களுக்கு அதிக அளவில் பணத்தேவைகள் இருக்கிறது, இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறீர்கள், இந்த பணம் வந்தால் தான் அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்னும் பட்சத்தில் இதே தீபத்தை உங்களுடைய நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி ஏற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். பணவரவு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர எலுமிச்சம் பழ பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று பணவரவை அதிகரித்து, அதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்வோம்.

- Advertisement -