இன்று குரு பகவான் அதிசார பெயர்ச்சி அடைந்ததால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிக்காரர்கள் யார்?

guru-astro1

பங்குனி மாதம் 24 ஆம் தேதி ஆகிய இன்று அதிசார பெயர்ச்சியாக குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். இதனால் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ராஜயோகத்தையும் மற்ற ராசிக்காரர்கள் ஒரு சில அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள். இதுவரை தடைப்பட்ட திருமணங்கள் வெற்றியை காணும். இவ்வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? இதில் உங்கள் ராசியும் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

guru-bhagavan

நவ கிரக பெயர்ச்சிகளில் குரு மற்றும் சனி பகவானுடைய பெயர்ச்சி பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும். குருபகவான் பெயர்ச்சி ஆகும் பொழுது யாருக்கெல்லாம் நன்மைகள் உண்டாகும் என்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பார்கள்! அதே போல குரு சரியான இடத்தில் அமர விட்டால் நடக்கும் கெடு பலன்களையும் ஜாதகர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த வகையில் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய இந்த ஐந்து ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மேஷம்:
mesham-rasi1
மேஷ ராசிக்காரர்கள் குரு பகவானுடைய அருள் பெறுவதற்கு அவருடைய சன்னிதிக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். குரு பகவானுக்கு மேஷ ராசி மூன்றாம் வீடாக இருப்பதால் சோம்பேறித்தனமாக செயல்படுவீர்கள். உடல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படும். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கடகம்:
kadagam-rasi
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் கோபம், சோம்பல், நிதானமின்மை, அவசரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் கவனமாக செயல்பட்டால் வெற்றி காணலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீங்கள் எந்த வகையில் வருமானம் ஈட்டினாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி:
kanni-rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு மறைவு ஸ்தானமாக இருக்கும் ஆறாம் இடத்திற்கு குரு செல்வதால் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்துவார். வம்பு வழக்குகள், தோல்விகள், நஷ்டம், பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். புதிதாக எந்த ஒரு முதலீடுகளையும் செய்யாமல்! இருக்கும் வேலையிலேயே கவனமாக இருந்தால் வெற்றி காணலாம். உங்கள் புத்தி என்ன சொல்கிறதோ! அதைக் கேட்டு நடந்தால் அனுகூலமான பலன்கள் உண்டு. சிந்திக்காமல் செயல்படும் காரியம் ஒவ்வொன்றும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

விருச்சிகம்:
viruchigam-rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குரு பெயர்ச்சியினால் பெரிதாக நற்பலன்கள் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆனால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயமாக கிடைக்கும். வீண் விரயங்களும், சுபகாரியங்களும் நடக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் உடல் உழைப்பை அதிகமாக செலுத்த வேண்டிய காலகட்டம் இது தான். சற்று சிரமப்பட்டு அனைத்தையும் தாங்கிக் கொண்டால் எதிர்காலத்தில் வெற்றி நிச்சயம்.

மகரம்:
magaram-rasi
மகர ராசிக்காரர்களுக்கு குருபகவான் வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் நீங்கள் எல்லா இடங்களிலும் மதிப்புடன், மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். பேச்சு சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்பவர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். யாருக்கும் எந்த வித வாக்குறுதிகளையும் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. பண ரீதியான விஷயங்களில் கவனமாக கையாண்டால் மன அமைதி இருக்கும்.