அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் அதிசார குரு பெயர்ச்சி. யோகம் பெற போகும் லக்னக்காரர்கள் யார்? யார்?

Guru Baghavan

மேஷம்:

Aries zodiac sign
குருபகவானின் அதிசார பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். குருபகவான் அதிசாரமாக பத்தாம் வீட்டிற்கு வருவதால், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இந்த அதிசார பெயர்ச்சி உதவியாக இருக்கும். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த நோய்கள் தீரும். சொந்தச் சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வண்டி வாகனங்கள் வாங்கலாம். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி. உங்களுக்கு யோகம்தான்.

ரிஷபம்:

Taurus zodiac sign
ரிஷப லக்னக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றிதான். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு குரு பகவான் வருவதால் நல்லதே நடக்கப்போகிறது. உங்களின் புகழ் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களது பிள்ளைகளின் செயல்பாடு, உங்களுக்கு பெரிய பெருமைகளை தேடி தரப்போகிறது. பணவரவு அதிகரிக்கும். தீராத கடனை கூட தீர்க்கும் காலம் வந்துவிட்டது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மிதுனம்:

Gemini zodiac sign
மிதுன லக்னக்காரர்களுக்கு இந்த அதிசார பெயர்ச்சியால் சுப விரயங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது. குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்தை பார்க்கின்றார். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பண மழையில் நனையப் போகிறீர்கள். சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கின்றது. வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டிய வாய்ப்புகள் அதிகம் வரும். உங்களின் பிள்ளைகளால்  புகழ் வந்து சேரும். வாழ்க்கைத் துணைவியின் மூலம் அதிக நன்மையை பெற போகிறீர்கள்.

- Advertisement -

கடகம்:

zodiac sign
இந்த அதிசார குருப்பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமானதாக அமையப்போகிறது. சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு குரு உச்சம் அடைகிறார். திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். எடுத்த காரியங்கள் வெற்றியில் முடியும். உடல் ஆரோக்கியம் சீராகும். எந்த ஒரு செயல்பாட்டிலும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் செயல்படுவீர்கள். கையில் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்காமல் பின்வாங்க மாட்டீர்கள். தொழில் லாபத்தோடு செல்லும். குரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தர தான் போகின்றார்.

சிம்மம்:

Leo zodiac sign
இந்த அதிசார பெயர்ச்சி உங்களுக்கு யோகமாகத்தான் அமையப்போகின்றது. இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருந்தாலும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியானது உங்களிடம் வந்துவிடும்.

கன்னி:

Virgo zodiac sign
கன்னி லக்னக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதால் நல்ல பலன்தான். அற்புதமான யோகங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது. குருவின் பார்வை உங்கள் ராசியின் லக்னத்தின் மீது விழுகிறது. மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். எந்த ஒரு செயலை எடுத்தாலும் சுறுசுறுப்பாக முடிக்க வேண்டும் என்று நினைத்து, அந்த காரியத்தை சுலபமாக முடிக்கவும் செய்வீர்கள். மொத்தத்தில் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி தான். சொத்துக்கள் வாங்க வாய்ப்பு அதிகம் உள்ளது. மாணவர்களுக்கு வெளிநாட்டில் சென்று படிக்கக்கூடிய யோகம் கூட கிடைக்கலாம்.

துலாம்:

Libra zodiac sign
இந்த அதிசார குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலனை அளிக்கப் போகிறது. சுபச்செலவுகள் ஏற்படும். புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும். நீங்கள் செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். செலவுகளை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இதுநாள் வரை இருந்த கஷ்டம் விலக போகிறது என்பதால் சந்தோஷம் அடையலாம்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign
இந்த அதிசார குரு பெயர்ச்சியின் மூலம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது இடத்தில் விழுகின்றது. இதுநாள் வரை இருந்த சுப தடைகள் நீங்கும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நல்ல வரன் அமையும். அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் காலமாக இது அமையப்போகிறது. இதுநாள் வரை இருந்த உடல் உபாதைகள் தீர்ந்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடையலாம். விரும்பிய கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விசா கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும்.

தனுசு

Dhanusu Rasi
இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்திற்கு நல்ல தீர்வினை பெற போகிறீர்கள். குரு அதிசாரமாக இரண்டாம் வீட்டிற்கு செல்கின்றார். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயமாக நல்ல வேலையை கொடுக்கப் போகிறார். உங்களது ராசியில் இருந்து கொண்டு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மனநிறைவான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்.

மகரம்:

Capricornus zodiac sign
இந்த அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தர போகின்றது. திருமணத்தில் இருந்த தடை நீங்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. உயர்கல்விக்கு நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மொத்தத்தில் இந்த அதிசார பெயர்ச்சியின் மூலம் உங்களின் பிரச்சினைகள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்:

Aquarius zodiac sign
குருபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டிற்கு வருகின்றார். சுப விரயங்கள் ஏற்பட தான் செய்யும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடையும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள்வரை தீர்க்கமுடியாத கடன்களை கூட தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கையில் எடுத்த காரியத்தை வெற்றியில் முடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. புதிய சொத்துக்களை வாங்க நல்ல நேரம் தான் இது.

மீனம்:

Pisces zodiac sign
குரு பகவானுக்கு ராசி அதிபதி மீனம் தான். அதிகப்படியான லாபத்தை மீன லக்னக்காரர்கள் பெறப் போகிறார்கள். நீங்கள் எதிர்பாக்காத பணவரவு கூட உங்கள் கைகளில் வந்து சேரும். கடன் கேட்டால் எவ்வளவு வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் தான் திருப்பித் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பார்த்து சிக்கனமாக செலவு செய்வது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணத்தடை நீங்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்கு தயங்க வேண்டாம். நிச்சயமாக வெற்றிதான். உங்களது பிள்ளைகளால் நீங்கள் மகிழ்ச்சி அடைய போகும் காலமிது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Athisara guru peyarchi 2020. Athisara guru peyarchi. Guru athisaram 2020. Guru athisaram palangal. Athisara guru peyarchi 2020 date.