ஒவ்வொரு மாதப்பிறப்பும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அந்த நாளில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் அந்த மாதமே நமக்கு சிறப்பான மாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எப்படி வருட பிறப்பு சமயத்தில் ஆலயம் சென்று சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அதே போல் தான் ஒவ்வொரு மாத பிறப்பிலும் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் பலரும் இதை பின்பற்றுவது கிடையாது. அப்படி பின்பற்றினோம் என்றால் நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அந்த வகையில் டிசம்பர் முதல் நாள் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அதிர்ஷ்டம் தேடி வர
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இது ஆங்கில மாதமாக இருந்தாலும் சரி, தமிழ் மாதமாக இருந்தாலும் சரி. தமிழ் மாதத்தை பொறுத்தே ஆங்கில மாதத்தின் சிறப்புகளும் அமைகிறது. அந்த வகையில் டிசம்பர் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் ஒன்று சேர்ந்து வரக்கூடிய மாதமாக திகழ்கிறது. கார்த்திகை மாதமும் மார்கழி மாதமும் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் தீபம் ஏற்றுவதற்கு உரிய மாதமாகவும் திகழ்கிறது.
எப்படி கார்த்திகை மாதத்தில் மாலை நேரத்தில் வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோமோ? அதே போல் மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் நிலை வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த டிசம்பர் மாதம் முதல் நாள் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.
டிசம்பர் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் சூரிய பகவானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முழு கோதுமை அல்லது கோதுமை மாவோ இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக வேண்டும். காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் வரக்கூடிய சூரிய ஹோரையில் ஏதாவது ஒரு மணி நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
வீட்டு பூஜையில் ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் கோதுமையை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு இந்த மாதம் முழுவதும் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து இந்த தீபத்தை குளிர வைத்து விடுங்கள். கோதுமையை நாம் சமையலுக்கும் பயன்படுத்தலாம் மற்ற உயிரினத்திற்கு தானம் ஆகவும் தரலாம்.
இதையும் படிக்கலாமே: மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய தானம்.
சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் பிறக்கிறது என்பதால் சூரிய பகவானை முழுமனதோடு நம்பி இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.