இந்த 2 விரதத்தை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் போதும். அதிர்ஷ்டலட்சுமியே நேரில் வந்து உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டுவாங்க!

kadhavu

பல மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் பெரிய அளவில் சொத்து, சுகங்களையோ, மனநிறைவோ கிடைக்காமலேயே போய்விடும் சூழல் ஏற்படுவதை நாம் காணமுடிகிறது. அதே நேரம் வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டும் அவர்கள் அதிகம் முயற்சிக்காமலேயே அனைத்து வகையான சுகபோகங்களும் அவர்களுக்கு கிடைத்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதற்கு காரணம் அத்தகைய நபர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அருளாசிகள் இருப்பதே காரணம் என சில சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. எல்லாக் காலத்திலும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கூட தங்கள் வாழ்வில் “அதிர்ஷ்டம்” எனும் வசந்தம் வீச செய்ய வேண்டிய சில எளிய விடயங்கள் என்ன? என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

adhirshta-lakshmi1

வாழ்வில் கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பவர்கள் “அதிர்ஷ்டம்” என்பது தங்களுக்கு வராதா என ஏங்குபவர்களுக்கும் பெரியோர்கள் கூறிய ஒரு அற்புத வழிபாட்டு முறையாக விரத வழிபாடு முறை இருக்கின்றது. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வருகின்ற “ஏகாதசி” மற்றும் “பிரதோஷம்” தினங்களில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு, உணவு மற்றும் தண்ணீர் கூட  அருந்தாமல் திருமால் மற்றும் சிவபெருமானை மனதில் நினைத்து, அந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் துதித்து வழிபட்டு வர வேண்டும். இந்த மகத்தான நாட்களில் முழு தினமும் உணவு ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பது தான் மிகச்சிறப்பான பலன்களை கொடுக்கும் என்றாலும் வேலை நிமித்தம் காரணமாக பலருக்கும் இது சாத்தியமற்றதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் குறைந்தபட்சம் அந்த விரத நாளின் காலை ஒரு வேளை உணவு மட்டும் தண்ணீர் ஏதும் அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து வழிபடுவது நல்ல பலன்களை நிச்சயம் ஏற்படுத்தும். சைவ, வைணவ வழிபாட்டு பாரம்பரியம் கொண்டவர்கள் அவரவர் வசதிக்கேற்ப “பிரதோஷம்” அல்லது “ஏகாதேசி” நாட்களில் உண்ணாவிரத வழிபாடு மேற்கொள்ளலாம். வர வாழ்வில் ஏற்படுகின்ற துரதிருஷ்ட நிலை விரைவில் தீர்ந்து அதிர்ஷ்டங்கள் பெருகும்.

காலையில் வீட்டிலிருந்து வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய ஆண்கள், தங்களின் ஆடைகளில் சந்தனம் அல்லது மல்லிகை பூ வாசம் கொண்ட வாசனை திரவியங்களை பூசி செல்வதால், அன்றைய தினம் அவர்களுக்கு கேடு தரும் வினைகள் நீங்கி காரிய வெற்றி, திடீர் அதிர்ஷ்டங்கள் போன்ற யோகங்கள் ஏற்படச் செய்யும். ஏனெனில் மனிதர்களை மயக்கும் நறுமணம் மிகுந்த சந்தனம் மற்றும் மல்லிகை பூ செல்வ வளங்களை அருளும் அதிபதியான சுக்கிர பகவானின் அருட்கடாட்சம் நிறைந்து, அவரின் ஆசிகளை பெற்று தரக்கூடிய பொருட்களாக உள்ளன.

jasmine

தற்காலத்தில் நவ நாகரீகம் என்கிற பெயரில் கிழிந்து போன ஜீன்ஸ் பேண்ட் போன்றவற்றை ஆண் – பெண் பேதமில்லாமல் அணிகின்றனர். இன்னும் சிலர் துவைக்காத பேன்ட் மற்றும் மேல் சட்டைகளை ஒரு நாளுக்கும் மேலாக தொடர்ந்து அணிந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட செயல்கள் ஒருவருக்கு மிகுந்த தரித்திரத்தையே கொண்டு வந்து சேர்க்கும். எனவே அதிர்ஷ்டங்களை அதிகம் பெற நினைப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உள்ளாடை முதற்கொண்டு அனைத்து உடைகளும் தூய்மையானதாக அணிந்து வெளியில் செல்லும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

வாசனை மிகுந்த மலர்கள் இருக்கின்ற இல்லத்தில் செல்வக் கடவுளான மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே முடிந்தவரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலும் மல்லிகை, சம்பங்கி, மரிக்கொழுந்து பாரிஜாதம் போன்ற தெய்வீக அம்சம் பொருந்திய வாசனை மலர்ச் செடிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வகையினை வளர்த்து வந்தால் துரதிர்ஷ்டங்கள் வீட்டை அணுகாமல் விலகி, அதிர்ஷ்ட லட்சுமி என்றென்றும் உங்கள் இல்லத்தில் வாசம் செய்ய வழிவகுக்கும்.