மகாலட்சுமிக்கு இந்த 1 பழத்தை மட்டும் நிவேதனமாக வைத்து வழிபட்டாலே போதும். அத்தனை பணக் கஷ்டமும் நீங்கி, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க தொடங்கி விடும்.

mahalashmi4

வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்க வேண்டும். வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பது தான் நம் எல்லோருடைய ஆசையாக இருக்கின்றது. ஆனால், என்ன செய்வது? இந்த பணம் மட்டும் எவ்வளவுதான் வந்தாலும் நமக்கு பற்றாக்குறையாகத் தான் இருக்கும். காரணம் பண வரவு அதிகரிக்க அதிகரிக்க, நம்முடைய தேவைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். எந்த மனிதரும், ‘எனக்கு இவ்வளவு பணம் போதும். என்னுடைய வாழ்நாளில் நான் திருப்தி அடைந்து விடுவேன்’ என்று சொல்லவே மாட்டார்கள். தனக்கான வருமானத்தில், தனக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து மனதார திருப்தி அடைந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிறைவு என்பது ஏற்படும்.

mahalakshmi

சரி, அதற்காக பணத்தின் மீது ஆசையே இல்லாமலும் மனிதர்களால் வாழ முடியாது. ஏனென்றால், பணம் இல்லை என்றால் நம்மை மதிப்பதற்கு இந்த உலகத்தில் ஆளே கிடையாது. அந்தப் பணத்தை நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? மகாலட்சுமியை நம் வசியப் படுத்தவேண்டும். சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இதற்கு ஆன்மீக ரீதியாக சில வழிபாட்டு முறைகளும் சூட்சம முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒரு சூட்சமமான முறையை இன்று நாம் தெரிந்து கொள்வோமா?

அத்திப்பழம், இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். அத்திப் பழம், பழங்கள் ஆகவே கிடைக்கின்றன. உலர வைத்த அத்திபழம் வட்ட வடிவில் கிடைக்கும். இதில் உங்களுக்கு எந்த வகையான அத்திப்பழம் கிடைத்தாலும் அதை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த அத்திப்பழத்தை வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நிவேதனமாகப் படைத்து இறைவழிபாடு செய்ய வேண்டும். பிரசாதமாக வைத்த அந்த பழத்தை நீங்கள் பிரசாதமாக சாப்பிட்டு விடலாம்.

aththi-palam

தொடர்ந்து வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்டை செய்து வாருங்கள். நிச்சயமாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். கடன் பிரச்சினை தீரும். உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதேபோல வெள்ளிக்கிழமை நவகிரகங்களில், சுக்கிர பகவான் இருப்பார். அந்த சுக்கிர பகவானுக்கு இந்த அத்திப்பழத்தை கொண்டுபோய் நிவேதனமாக வைத்து, அர்ச்சனை செய்து அந்த அத்திப்பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து நீங்கள் சாப்பிட்டு விடலாம்.

முடிந்தால் பதப்படுத்தப்படாத அத்திப்பழம் கிடைக்கும் பட்சத்தில் அதை மாலையாக கட்டி சுக்கிர பகவானுக்கு அணிவிக்கலாம். கோயில்களில் மகாலட்சுமி சன்னிதானம் இருந்தால், அந்த மகாலட்சுமிக்கும் இந்த அத்திப் பழ மாலையை அணிவிப்பது பலவகையான நன்மைகளை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

aththi-palam1

ஆன்மீக ரீதியாக அத்திப்பழம் நமக்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வட்ட வடிவில் பதப்படுத்தி இருக்கும், அத்திப்பழத்தை நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அத்திப்பழம் ஆரோக்கியமாகவும் நமக்கு பல பயன்களை கொடுக்கும். ஆன்மீக ரீதியாகவும் பல நல்ல பலன்களைக் கொடுக்கிறது. உங்களுடைய வீட்டில் நீங்களும் இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றித்தான் பாருங்களேன் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.