cricket seithigal : 30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் “பாலோ ஆன்” ஆன ஆஸி அணி

band 1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 622 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக புஜாரா 193 ரன்கள், பண்ட் 159*ரன்களையும் குவித்தனர்.

kuldeep 1

அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சிரமப்பட்டு எதிர்கொண்டு 300 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் இது அவரது முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

300 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ஆஸ்திரேலிய அணியினை பாலோ ஆன் செய்ய பணித்தார் இந்திய அணியின் கேப்டன் கோலி. இதனால் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட துவங்கியது. போதிய வெளிச்சமின்மை காரணமாக 4வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

finch

ஆஸ்திரேலிய அணி கடந்த 30 ஆண்டுகளில் சொந்த மண்ணில் எந்த அணிக்கும் எதிராக பாலோ ஆன் ஆனதில்லை. இந்நிலையில் முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக இந்த போட்டியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பாலோ ஆன் செய்து விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Cricket news today Tamil : சிட்னி மைதான வரலாற்று பலகையில் இடம்பிடித்த புஜாரா மற்றும் பண்ட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -