- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆவணி அமாவாசை காரிய சித்தி நேரம், மந்திரம்

ஆவணி அமாவாசை காரிய சித்தி நேரம், மந்திரம்

- Advertisement -

இன்று திங்கட்கிழமையோடு சேர்ந்து ஆவணி மாத அமாவாசை திதி இருக்கிறது. இதை சோமவார அமாவாசை தினம் என்று சொல்லுகிறார்கள். இந்த சோமவார அமாவாசை தினத்தின் காரிய சித்தி நேரம் என்ன, அந்த காரிய சித்தி நேரத்தில் நாம் உச்சரிக்க வேண்டிய வாராகி அம்மன் மந்திரம் என்ன, இது பற்றிய ஆன்மீகம் சார்ந்த விரிவான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் எப்பேர்பட்ட தீராத துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் இருந்தாலும் அதிலிருந்து வெளிவர இந்த 1 மணி நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின் சொல்லக் கூடிய இந்த ஒரு மணி நேரத்தில் வாராகி அம்பாளின் மந்திரத்தை உச்சரித்து வேண்டிய வரங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத நிறைய அதிசயங்கள் நடக்கும். அந்த வாராஹி அம்பாள் உங்கள் கனவில் வந்து பிரச்சனைக்கு தீர்வு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த அந்த மந்திரம் என்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

மந்திரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த அமாவாசை நாளின் காரிய சித்தி நேரம் எப்போது இருக்கிறது என்று பார்த்து விடுவோம். இன்று திங்கட்கிழமை 2.9.2024ஆம் தேதி இரவு 10:11 மணி முதல் 11:02 மணி வரை காரியசித்தி நேரம் நமக்கு இருக்கிறது. இது தூங்கக்கூடிய நேரம்தான் இருந்தாலும், கொஞ்சம் கண் விழித்து பூஜையறையிலோ அல்லது உங்கள் வீட்டில் அமைதியாக இருக்கும் ஏதாவது ஒரு இடத்திலோ மனதார வராகி தாயை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வரும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம், ஏதாவது ஒரு பிரச்சனையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று வாராகியை பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம்.

உங்களால் முடியும் என்றால் இந்த மந்திரத்தை கணக்கில்லாமல் இந்த 1 மணி நேரமும் உச்சரிக்கலாம் தவறு கிடையாது. இந்த நேரத்தில் என்ன வேண்டுதல் தேவையோ சரியான முறையில் வையுங்கள். சக்தி வாய்ந்த இந்த நேரத்தை தவற விடாதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு எது ரொம்ப ரொம்ப முக்கியமோ அதை அன்னையிடம் கேளுங்கள்.

- Advertisement -

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி
கன்யகாயை நம!

வெறும் இரண்டே வரி மந்திரம் தான். இந்த மந்திரத்தை மேலே சொல்லப்பட்டிருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் நம்பிக்கையோடு சொன்னால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு அமாவாசை நாள் ரொம்ப ரொம்ப முக்கியம்.

இதையும் படிக்கலாமே: கெட்ட சக்தி விலக சக்தி வாய்ந்த எலுமிச்சை பரிகாரம்

அதிலும் சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த காரிய சித்தி நேரத்தை தெரிந்து கொண்டு உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நம்முடைய கஷ்டங்கள் உடனடியாக வதம் செய்யப்படும். சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும்தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த அறிய மந்திரத்தையும், அறிய ஆன்மீக வழிபாட்டையும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்