- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆவணி மாத மூன்றாம் பிறை வழிபாடு

ஆவணி மாத மூன்றாம் பிறை வழிபாடு

- Advertisement -

ஆவணி மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. அதனால்தான் ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் பலரும் சூரிய வழிபாட்டை மேற்கொண்டு சூரிய பகவானுக்காக விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை தான் ஆவணி மாதத்தின் மூன்றாம் பிறையும் வருகிறது. இந்த நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானின் அருளையும் சந்திர பகவானின் அருளையும் ஒருசேர பெற முடியும். அப்படி இவர்கள் இருவரின் அருளையும் பெற்றவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அந்த சிறப்பான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆவணி மாத மூன்றாம் பிறை வழிபாடு

அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று பலரும் பல விதங்களில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதே போல் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள். இப்படி செய்வதன் மூலம் சந்திரன் வளர்வதைப் போல அவர்களுடைய வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மேலும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்குரிய அற்புதமான நாளாக தான் மூன்றாம் பிறை திகழ்கிறது. அதேபோல் ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரிய நாளாகவும் சூரிய பகவானை வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளையும் நம்மால் பெற முடியும் என்பதால் இன்றைய நாள் சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. சூரிய சந்திர வழிபாட்டோடு சேர்த்து மூன்றாம் பிறை வழிபாட்டை செய்யும் பொழுது சூரிய சந்திர அருளைப் பெற முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது பிரசாதமாக கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தட்டை எடுத்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வெட்ட வெளியில் மேற்கு திசை பார்த்தவாறு ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. வெட்டவெளியில் ஏற்ற இயலாது என்பவர்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றுக் கொள்ளுங்கள். மேற்கு திசை பார்த்தவாறு தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு “ஓம் சந்திரமௌலீஸ்வராய நம” என்னும் மந்திரத்தையும் “ஓம் சந்திர ஆகர்ஷணாய ஆகர்ஷணாய நம” என்னும் மந்திரத்தையும் 108 முறை கூறி சந்திர பகவானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு சந்திர பகவானுக்கு கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். தீபத்தை குளிர வைத்துவிட்டு தட்டில் பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியை எடுத்து மேற்கு திசை பக்கம் தூவி விட வேண்டும். பிறகு நெய்வேதியமாக வைத்த கோதுமையால் செய்யப்பட்ட பிரசாதத்தை வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களுக்கு முதலில் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சந்திர பகவானின் அருளையும் சூரிய பகவானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வ தடைகள் நீங்குவதோடு தொழில் மற்றும் வேலையில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தொழிலில் வெற்றி அடைய ஆவணி ஞாயிறு வழிபாடு

சூரிய பகவானுக்கும் சந்திர பகவானுக்கும் உகந்த இந்த நாளில் இருவரையும் ஒரு சேர நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பலவிதமான அற்புத நிகழ்வுகள் நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்