இந்த 5 நபர்களிடமிருந்து எப்பொழுதும் சற்று தள்ளியே இருங்கள்! வாழ்க்கையில் தேவை இல்லாத நபர்கள் யாரெல்லாம்?

ஒரு சிலருடைய குணாதிசயங்கள் இன்னொருவருக்கு பிடிப்பது இல்லை. ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை. அதுபோல மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நம்மைப் போல தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனமான செயலாக இருக்கும். அவர்கள் எப்படியோ அப்படியே ஏற்றுக் கொள்ளும் பொழுது தான் நமக்கு அவர்களுடனான உறவு கடைசி வரை நிலைக்கும். ஆனால் இந்த சிலபேரை முற்றிலும் தவிர்ப்பதே நமக்கு நல்லது என்று இருக்கும். அப்படியான நபர்கள் யார் எல்லாம்? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

avoid1

நபர் 1:
எவரொருவர் எல்லாவற்றிலும் குறை காண்கிறார்களோ! அவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி சதா பேசிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நல்லதைத் தவிர கெட்டதை மட்டுமே பார்ப்பார்கள். புதிய விஷயங்களில் கூட அதில் இருக்கும் கெட்டதை மட்டுமே சுட்டிக் காட்டுவார்கள். இத்தகையவர்களை தவிர்த்து விடுங்கள்.

நபர் 2:
எப்பொழுதும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள்! உங்களுடைய நண்பராக இருந்தால் அவர்களிடம் இருந்து நீங்கள் தள்ளி இருப்பது நல்லது. வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம். பிரச்சினையே வாழ்க்கையாக ஒருபோதும் இருக்கக் கூடாது. எப்படி இவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியாது, ஏதாவது ஒரு பிரச்சினையில், சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எப்படி விடுபடுவது? என்று யோசித்துக் கொண்டே இருப்பார். இத்தகையவர்கள் நம்முடைய மன அமைதியை கெடுப்பவர்கள். என்றாவது நம்மையும் சிக்கலில் மாட்டி விடுவார்கள். எனவே இவர்களை தவிர்த்து விடுங்கள்.

avoid

நபர் 3:
சுயநலமாக இருப்பவர்களை எடுத்துக் கொள்ளலாம். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே பேசுவதும், தன்னுடைய விருப்பு வெறுப்புகளை கூறுவதும் இவர்களுடைய பழக்கமாக இருக்கும். நீங்கள் ஒரு விஷயத்தை கூற வரும் பொழுது அவர்கள் அதனை கூற விடாமல் தடுத்து திசைத் திருப்பி விடுவார்கள். அல்லது கேட்கக் கூடிய ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். இவர்களால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்படிப்பட்டவர்களை தவிர்த்து விடுவது நல்லது.

நபர் 4:
நம்மிடம் ஒன்றும் மற்றவர்களிடம் ஒன்றும் பேசும் நபர்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஒரு சிலர் தன்னிடம் ஒருவர் எப்படி இருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்ப்பார்கள். எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை ஒரே மாதிரியாக தான் நடத்துவான். உங்களிடம் ஒரு மாதிரியாகவும், அவர்களிடம் ஒரு மாதிரியாகவும் நிச்சயம் நடத்த மாட்டான். இவர்களை எப்படி கண்டுபிடிப்பது? உங்களுடைய நண்பர் இன்னொரு நண்பரை பற்றி உங்களிடம் தவறாக கூறும் பொழுதே நீங்கள் எச்சரிக்கையாகி விடலாம். ஒருவரைப் பற்றிய குறைகளை அவர்களிடமே கூறும் பொழுது தான் அங்கு அவர்கள் நேர்மையானவர்கள் என்று அர்த்தமாகும். அதைவிடுத்து இன்னொருவரிடம் சென்று கூறும் பொழுது அங்கு நேர்மை உடைகிறது. நீங்கள் தவறு செய்தாலும் அதை இன்னொருவரிடம் சென்று கூறி விடுவார்கள். உங்களிடம் கூறி உங்களை திருத்த முயற்சிக்காத இந்த நபர்களை தவிர்ப்பது நல்லது.

enemy1

நபர் 5:
எந்த ஒரு நபரிடம் உங்களுக்கு பேசும் பொழுது நெகட்டிவிட்டி தோன்றுகிறதோ! அந்த நபர்களை தவிர்த்துவிடுங்கள். சதா அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும் இருக்கும் இவர்கள் உங்களுடைய நல்ல மனநிலையை கூட மாற்றி விடுவார்கள். அதுவரை மகிழ்ச்சியாக இருந்த நீங்கள் இவர்களிடம் பேசும் பொழுது மகிழ்ச்சி குறைந்து காணப்படுவீர்கள். தொடர்ந்து இப்படி ஒருவரிடம் நடக்கும் பொழுது அவர்களை தவிர்த்து விடுவது நல்லது.