ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் பலன்கள் பற்றி தெரியுமா? இப்பூஜை கொண்டாடுவதற்கான அவசியம் பற்றி தெரியுமா?

poojai
- Advertisement -

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை எல்லாருக்கும் பொதுவான பூஜையாகும். கொலு வைத்திருப்பவர்களும் சரி, கொலு வைக்காதவர்களும் சரி இப்பூஜையை சிறப்புடன் கொண்டாடலாம். இந்த பூஜை முப்பெரும் தேவியரான லட்சுமி, துர்கா, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வணங்குவதற்கான சிறப்பு பூஜையாகும். இப்பண்டிகையை அனைவரும் தங்கள் வீடுகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் கொண்டாடி மகிழ்கின்றனர். தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு கொண்டாடப்படும் இந்த பூஜைகளினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

ayudha

ஒரு மனிதனின் உடல் வளர்ச்சிக்கு வலிமையும், வளமான வாழ்க்கைக்கு செல்வமும், கல்வியும் மிகவும் அவசியமாகும். அவ்வாறு உடல் வலிமையை வெளிப்படுத்தும் சக்தியாக துர்கா தேவியையும், வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளத்தை நல்க கூடியவராக ஸ்ரீமகாலட்சுமி அம்மையாரையும், அறிவையும் ஆற்றலையும் தரக் கூடிய கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் வழிபட்டு, அந்த தேவியரின் அருளைப் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக கொண்டாடப்படும் தினம் தான் நவராத்திரி எனப்படும்.

- Advertisement -

முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரிய தினங்களாகும். இந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு பத்தாவது நாள் மூன்று தேவியரும் பராசக்தியாக எழுந்தருளி மகிஷாசுர அசுரனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனையே விஜயதசமயாக நாம் கொண்டாடி வருகிறோம்.

dhurgai

உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவர் சரஸ்வதி. எனவே ஆயுத பூஜையுடன் சரஸ்வதி பூஜையும் சேர்த்து கொண்டாடுகிறோம். கல்வியுடன் கலைகளுக்கும் உரியவர் சரஸ்வதி.

- Advertisement -

ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் அன்றைய தினம் துவங்கினால் அந்த வருடம் முழுவதும் அவர்களின் தொழில் சிறப்புடன் நடந்து செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.

saraswathi11

அவ்வாறு தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கு அன்றைய தினம் பூஜை செய்ய வேண்டும். முதலில் அந்த பொருட்களை தண்ணீரில் கழுவிக் கொண்டு அவற்றுக்கு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அபிஷேகம் செய்து அதன் பிறகு சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

பின்னர் நாம் தொழில் செய்யும் இடத்தை சுத்தம் செய்து அலங்காரம் செய்து வாழை இலைபோட்டு படையலிட்டு ஆயுதங்களை அவ்விடத்தில் வைத்து தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். நாம் தொழில் செய்யும் இடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அன்றைய தினம் நம்மால் முடிந்த சலுகைகளை செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மன திருப்தியும் சந்தோஷமும் கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் நமது தொழில் மேலோங்கி செல்லும்.

- Advertisement -