உங்களுக்கு வயதானாலும், உங்களுடைய முகம் எப்போதுமே இளமையாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் அழகா தெரிய இதை மட்டும் முகத்தில் 1 சொட்டு போட்டுக்கோங்க போதும்.

face6

நமக்கு வயதாகி கொண்டே இருப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம்தான். ஆனால் எவ்வளவு தான் வயதானாலும் எவ்வளவு நாட்களை நம்முடைய வயது கடந்து சென்றாலும் நம்முடைய மனதிற்கு வயது என்பது ஆகவே கூடாது. என்றுமே நம்முடைய மனதை இளமையாக வைத்துக் கொண்டால், இயற்கையாகவே நம்முடைய சருமமும் அழகாகவே இருக்கும். அதிகப்படியான மனக்குழப்பம் மன அழுத்தம் இருந்தாலும் நம்முடைய அழகு சீக்கிரமே கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இது முதல் விஷயம். இரண்டாவதாக நம்முடைய இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள, பவர்ஃபுல் க்ரீம் ஒன்றைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

badam-paste

தினமும் இரவு இதை லேசாக இரண்டு சொட்டு தொட்டு, உங்கள் முகம் முழுவதிலும் தடவிக் கொண்டு, தூங்கி விட்டாலே போதும். ஆயுசுக்கும் உங்களது சருமம் இளமையாக இருக்கும். பாதாம் பருப்பை வைத்து ஒரு ஜெல் எப்படி தயாரிப்பது என்று தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பாதாம்பருப்பை சாப்பிடுவதற்கே வழி இல்லை என்று நினைக்காதீர்கள். 10 லிருந்து 15 பாதாம் பருப்புகள் இருந்தாலே போதும். 20 நாட்கள் நாம் பயன்படுத்த தேவையான கிரீமை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

பாதாம் பருப்பு – 10 லிருந்து 15, ரோஸ் வாட்டர் – தேவையான அளவு, பாதாம் ஆயில் – 2 ஸ்பூன், வைட்டமின் E மாத்திரை -2, அலோ வேரா ஜெல் தேவையான அளவு. முதலில் பாதாம்பருப்பை தண்ணீரில் போட்டு முந்தைய நாள் இரவே ஊற வைத்துவிடுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அது அப்படியே ஊறட்டும். ஊறிய பாதாம் பருப்பிலிருந்து தோலை மட்டும் நீக்கி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.

badam

15 பாதாம் எடுத்துக் கொண்டால் ஒரு 1/4 கப் அளவு ரோஸ் வாட்டரை ஊற்றி விழுது போல, இந்த பாதாமை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு வடிகட்டியில் மூலம் பாதாமை பிழிந்து எடுத்தால் 25 ml பாதாம் பால் உங்களுக்கு கிடைக்கும். 25 ml என்பது கணக்கு கிடையாது. ஒரு 1/4 டம்ளர் அளவு கிடைக்கும். அந்த அளவிற்கு நீங்கள் ரோஸ் வாட்டரை ஊற்றி பாதாமை அரைத்து, பாதாம் பால் தயார் செய்து கொள்ள வேண்டும். (அந்த பாதாம் பால் கொஞ்சம் கெட்டிப்பால் ஆகத்தான் இருக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக எடுத்து விடக்கூடாது.)

- Advertisement -

அரைத்த பாதாம் திப்பியை தூக்கி போட்டு விட வேண்டாம். அதில் கொஞ்சமாக பாலை ஊற்றி கலந்து முகம் கை கால்களை ஸ்கரப் செய்து சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். சரி ஒரு சிறிய பவுலில் தயாராக இருக்கும் பாதாம் பாலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதோடு பாதாம் ஆயில் – 2 ஸ்பூன், வைட்டமின் E மாத்திரையிலிருந்து உள்ளே இருக்கும் ஜெல், அலோ வேரா ஜெல் 2 ஸ்பூன், இவைகளை பாதாம் பாலுடன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கினால் ஜெல் போல ஒரு கிரீம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

vitamin-c-tab

தண்ணீர் இல்லாத ஒரு கண்ணாடி பாட்டிலில் இதைப் போட்டு, காற்று புகாமல் மூடி வெளியில் வைத்தால் கூட பத்து நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 20 நாட்கள் தாராளமாக இந்த கிரீமை பயன்படுத்தலாம். இதைத் ஒட்டுமொத்தமாக முகத்தில் அப்ளை செய்து கொள்ளப் போவது கிடையாது. சீரம் போல தான் இதுவும். ‘பாதாம் சீரம்’ என்று வைத்துக் கொள்ளுங்கள்.

badam1

ஒரு விரலால் க்ரீமை தொட்டு முகத்தில் ஆங்காங்கே வைத்துக்கொண்டு அப்படியே ஃபேரன் லவ்லி போல் தடவி விட்டு விட வேண்டும். பார்ப்பதற்கு வெளியில் தெரியக்கூடாது. இரவு முழுவதும் இது அப்படியே உங்களுடைய முகத்தில் இருக்கலாம். மறுநாள் காலை உங்களது முகம் பொலிவானதை உங்களால் உணரமுடியும். தொடர்ந்து தினம்தோறும் இதை எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். வயது முதிர்ந்த தோற்றத்தை எவ்வளவு நாள் தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு நாள் தள்ளிப் போட இந்த கிரீம் பெஸ்ட் ரிசல்ட்ஸ் கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க.