பாதாம் பிசின் நன்மைகள்

badam pisin
- Advertisement -

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக என்னென்ன பொருட்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து சாப்பிட தொடங்குவோம். வெயில் காலம் முடிந்ததும் அந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுவோம். அந்த வகையில் நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுவது தான் பாதாம் பிசின். வெயில் காலத்திற்கு மட்டும் சாப்பிட வேண்டிய பொருளாக இது திகழ்வது கிடையாது. இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த மருத்துவ குணங்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக வெயில் காலத்தில் சப்ஜா விதைகள், பாதாம் பிசின், நன்னாரி சர்பத், எலுமிச்சம்பழ ஜூஸ், நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணமாவதை நம்மால் தவிர்க்க முடியும். இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை மட்டும் தான் சரி செய்பவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு பொருளுக்கும் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பாதாம் பிசினில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை பற்றியும் அதை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம்.

- Advertisement -

பாதாம் பிசின் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை இருக்கும் பெண்கள் தினமும் பாதாம் பிசினை சாப்பிட்டு வர மாதவிடாய் சுழற்சி என்பது சீராக ஏற்படும். கருவுற்றிருக்கும் பெண்கள் பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் வயிற்றில் இருக்கக்கூடிய கருவிற்கும் மிகுந்த ஊட்டச்சத்து தருவதோடு கருவில் இருக்கும் குழந்தையின் எலும்புகள் வலு பெறுவதற்கு உதவி புரிகிறது.

தினமும் பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைகிறது. இவ்வாறு குளிர்ச்சி அடைவதால் உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் முடியை அடர்த்தியாக வளரச் செய்யவும் உதவுகிறது. தலை முடிக்கு மட்டுமல்லாமல் பாதாம் பிசினை நாம் தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் நம்முடைய சருமமும் இயற்கையிலேயே இளமையான தோற்றத்தை பெற உதவுகிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஏஜிங் பண்புகள் சுருக்கத்தை நீக்க உதவுகிறது. இதை உணவாக எடுத்துக் கொண்டால் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கும் தடவுவதன் மூலம் முகச் சருமம் மிகவும் மிருதுவாகவும் அழகாகவும் சுருக்கமின்றியும் தென்படும்.

- Advertisement -

குழந்தைகள் பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் எலும்புகள் வலுப்பெறுவதோடு மட்டுமல்லாமல் மூளையின் செயல்பாட்டுத் திறன் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. தசை பிடிப்பால் அதிகளவு பாதிக்கப்படும் நபர்கள் தொடர்ச்சியாக பாதாம் பிசினை சாப்பிடுவதன் மூலம் தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடு பெறுவதோடு மட்டுமல்லாமல் தசைகள் வலுப்பெறும்.

இயற்கையான முறையில் அதேசமயம் மிகவும் பாதுகாப்பாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் பாதாம் பிசினை ஏதாவது ஒரு ரூபத்தில் தங்கள் உணவில் சேர்த்து வர அவர்களின் உடல் எடைக்க கணிசமான முறையில் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: தாய்ப்பாலுக்கு இணையான சத்து மிகுந்த தேங்காய் பால்

மிகவும் எளிதில் மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பாதாம் பிசினின் பயன்களை உணர்ந்து வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டு பயன் பெறுவோம்.

- Advertisement -