- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுக சுருக்கத்தை நீக்கும் பாதாம் பிசின் ஃபேஸ் பேக்

முக சுருக்கத்தை நீக்கும் பாதாம் பிசின் ஃபேஸ் பேக்

- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்காத நபர்களே இல்லை. வயதானாலும் தோற்றம் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். இவை அனைத்தையும் தருவதற்கு உதவக்கூடிய இயற்கை அளித்த பரப்பிரசாதமாக திகழ்வதுதான் பாதாம் பிசின். பாதாம் பிசினை வைத்து எந்த முறையில் ஃபேஸ் பேக் போட்டால் என்றும் இளமையாகவும் பொலிவான முகத்தையும் பெற முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பாதாம் பிசின் ஃபேஸ் பேக்

பாதாம் பருப்பில் அதிக அளவில் சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். பாதாம் பருப்பை நம்முடைய முகத்திற்கு தடவவும் செய்வோம், பாதாம் எண்ணெயையும் பயன்படுத்துவோம். இப்படி பாதாம் தொடர்பான அனைத்து பொருட்களையும் நம்முடைய அழகை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கிறோம். அந்த வகையில் பாதாம் மரத்திலிருந்து உருவாகக்கூடிய பிசினை தான் நாம் பாதாம் பிசின் என்று கூறுகிறோம். இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இதை தினமும் உட்கொள்வதன் மூலம் உடல் சூடு குறைந்து, உடல் சூட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பாதாம் பிசினை வைத்து முகச்சுருக்கத்தையும், கருமையும், கரும்புள்ளிகளையும் நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு நமக்கு நான்கு ஐந்து பாதம் பிசின் இருந்தால் போதும். இரவே அதை ஒரு முறை கழுவி விட்டு நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் கால் கப் காய்ச்சாத பசும்பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவையும் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை மிகவும் கெட்டியாக இருந்தால் மறுபடியும் பாலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நன்றாக அரைத்த பிறகு ஒரு பௌலில் மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் இருக்கக்கூடிய எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதாம் பிசின் ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.

முகத்தை நன்றாக கழுவி விட்டு முகம் கழுத்து போன்ற பகுதிகளில் நன்றாக இதை தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்குப் பிறகு இது அப்படியே இறுக ஆரம்பிக்கும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு முகத்தை கழுவிக்கொள்ளலாம். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் நீங்குவதோடு சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமையும் நீங்கும். கரும்புள்ளிகள் நீங்கும். ஒருவித பிரகாசம் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:முகம் தங்கம் போல் இருக்க டிப்ஸ்

மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பாதாம் பிசினை நம்முடைய முகத்திற்கு இந்த முறையில் நாம் பயன்படுத்துவதன் மூலம் என்றென்றும் இளமையான தோற்றத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்