இந்த 2 தெய்வங்களின் பெயரை தினமும் சொல்லி வந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எதற்கும் பயப்படவே தேவையில்லை. வரக்கூடிய கஷ்டமே, உங்களை பார்த்து பயந்து நடுங்கி ஓடி விடும்.

bairavar-astro
- Advertisement -

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மைப் பார்த்து பயந்து நடுநடுங்கி போகும் அளவிற்கு அப்படி நாம் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள நிச்சயம் எல்லோரும் ஆர்வமாக இருப்பீர்கள். எல்லா தெய்வமும் ஒன்று தான். தெய்வங்களில் பாகுபாடு கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு தெய்வத்திற்கு என்று ஒவ்வொரு தனித்துவமும் மகத்துவமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் எல்லோரும் முதலில் வழிபட வேண்டிய தெய்வம் என்றால் அது அவரவருடைய குலதெய்வம் தான். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

praying-god1

குலதெய்வத்தை வழிபாடு செய்த பின்னரே நம்முடைய இஷ்ட தெய்வம், நம்முடைய கஷ்டங்களை  தீர்த்து, தைரியத்தை கொடுக்கக்கூடிய தெய்வங்களை வழிபாடு செய்வோம். முதலில் உங்களுடைய குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லையா பரவாயில்லை. ‘கண்ணுக்குத் தெரியாத என் குலதெய்வமே என்னைக் காத்தருள வேண்டும்’ என்ற வார்த்தையை உச்சரித்து விட்டு அதன் பின்பு இந்த இரண்டு தெய்வங்களையும் வணங்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் குரு பகவானின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. அதாவது தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தியை வாரம்தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை தினத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். முடிந்தால் கொண்டைக்கடலை மாலையை வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து உங்களுக்கு வேலையில் இருக்கக் கூடிய பிரச்சினைகள், பண பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும். வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டங்கள் வராமல் இந்த வழிபாடு உங்களை காக்கும்.

guru-bagavan

அடுத்தபடியாக முக்காலத்தையும் தன் கையில் வைத்துக்கொண்டு, 12 ராசிகளையும், 27 நட்சத்திரத்தையும் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் கால பைரவரை அனுதினமும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். ‌கால பைரவரை நினைத்து வழிபாடு செய்வதற்கு காலம் நேரமே பார்க்காதீர்கள். உங்களுக்கு நேரமே சரியில்லை என்று சொல்லும் சமயத்தில், ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த கால பைரவரை நினைத்து கொண்டே இருங்கள். உங்களுடைய கெட்ட நேரம் கூட நல்ல நிறமாக மாறிவிடும். அந்தக் கால பைரவர் உங்களை காத்து நிற்பார்.

- Advertisement -

எவ்வளவு பெரிய கஷ்டமாக இருக்கட்டும். அந்த பாரத்தை கொண்டுபோய் காலபைரவர் சந்நிதியில், அவர் காலடியில் இறக்கி வையுங்கள். உங்களுடைய பிரச்சினையை மனமுருகி அவருடைய சன்னிதானத்தில் சொல்லுங்கள். உங்களால் முடிந்த தீபத்தை காலபைரவருக்கு ஏற்றி வைத்துவிட்டு காலபைரவரின் முன்பு அமர்ந்து மனதார தியானம் செய்யுங்கள். தினம் தோறும் அவர் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். அது போதும். வாழ்க்கையில் காலமும் நேரமும் உங்களை ஆட்டிப்படைக்கும் சமயத்தில் கூட தப்பித்துக் கொள்ளலாம்.

kaala bairavar

நம்மில் நிறைய பேருக்கு குலதெய்வம் தெரியாமல் இருக்கின்றது. குலதெய்வம் தெரியாதவர்கள் கூட, தெரியாத குலதெய்வம் எங்களை காக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, இந்த காலபைரவரை குலம் காக்கும் குல தெய்வமாக நினைத்து வழிபாடு செய்து வந்தால் உங்கள் குலதெய்வத்தை காட்டிக் கொடுக்கக் கூடிய வேலையையும் இந்த கால பைரவர் செய்துவிடுவார் என்ற ஒரு கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -