தீராத பண கஷ்டத்தில் தவிப்பவர்கள், தேங்காயை கொண்டு பைரவருக்கு இதை செய்தால் போதும். மூன்றே மாதத்தில் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.

bairavar

நம்மில் பல பேருக்கு கடன் பிரச்சனைகள் இருக்கும். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் வரவிற்கு மேல் செலவுகள் அமையும்போது, அதனை கடன் வாங்கி சரி செய்வோம். ஆனால் அந்தக் கடனை மீண்டும் செலுத்த இயலாமல் அது வட்டியுடன் சேர்த்து மிகப் பெரும் தொகையாக மாறிவிடும். அதனை அடைப்பதற்கு வழி இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் நமக்கு அழுத்தம் கொடுக்க, இறுதியில் வேறு வழியில்லாமல் ஊரை விட்டு வெளியேறுவோரும் உண்டு. அளவுக்கு மீறி ஆடம்பரச் செலவு செய்பவர்கள், குடிப்பழக்கம், மோசமான வழிகளில் பணத்தைச் செலவழிப்பவர்கள், எதிர்பாராவிதமாக தொழிலில் பெரும் நஷ்டம், குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் அவரைக் காப்பாற்ற சக்திக்கு மீறி கடன் வாங்குபவர்கள். இவர்களைப் போன்றவர்கள்தாம் கடன் தொல்லையிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறான நபர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.

kadan

மிகுந்த கடன் தொல்லைக்கு காரணமாக அமைவது நம் முற்பிறவியின் கர்மாவாக இருக்கலாம். கடன் பிரச்சனைகள் தீர பல பரிகார முறைகள் தீர்வாக இருக்கிறது. ஆனால் அதனை செய்தும் கடன் பிரச்சனை தீரவில்லை என்றால் நீங்கள் கடுமையான கர்ம வினைக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படி எந்தவிதமான பரிகாரம் முறையும் நமது கடன் பிரச்சினையை தீர்க்காத நிலையில் பைரவர் பரிகாரத்தை செய்யும் போது மூன்றே மாதங்களில் நமது கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான வழி பிறக்கும். இந்த பைரவ பரிகாரத்தை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

பைரவர்:
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சன்னதி இருக்கும், பைரவரை வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும். நாம் முற்பிறவியிலும், இப்பிறவியிலும் தெரிந்தோ தெரியாமலோ செய்த கர்ம வினைகளின் பாவங்களிலிருந்து நம்மை காத்தருள்பவர்தான் பைரவர். கடன் தொல்லையில் தவிப்பவர்கள், பணம் பொருளை இழந்தவர்கள் பைரவரை வணங்கி வந்தால், அதிலிருந்து நம்மை மீட்டு கரை சேர்ப்பார் என்பது ஐதீகம்.

bairavar

பரிகார வழிமுறைகள்:
பைரவ பரிகாரத்தை செய்ய நினைப்பவர்கள் அசைவம் சாப்பிடுவது மற்றும் குடிப்பழக்கம் இவ்விரண்டையும் கைவிட வேண்டும். குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு எந்த விதமான பரிகார முறைகளும் பலன் தராது. அசைவம் சாப்பிட்டால் இறை வழிபாடே பலன் தராது. இந்த பரிகாரத்தை கணவனுக்காக மனைவி செய்யலாம். ஆனால் அப்பாவிற்காக மகள் செய்யக்கூடாது. சகோதரர் சார்பாக சகோதரிகள் செய்யக்கூடாது. அப்படி செய்தாலும் அந்த பரிகாரமுறை பலன் தராது.

- Advertisement -

பரிகார பொருட்கள்:
01. பழைய வெள்ளை துணி அல்லது வேட்டி (சுத்தமாக துவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்).
02. சிறிதளவு மிளகு ( வீட்டில் உள்ள சமையல் அறையில் இருந்து எடுக்கக்கூடாது. கடையில் தான் வாங்க வேண்டும்).
03. கருப்பு நூல் கயிறு.
04. ஒரு முற்றிய தேங்காய். 05. மரச் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்.

kaala bairavar

பரிகாரம் செய்யும் முறை:
நன்றாக துவைத்து வைத்துள்ள பழைய வேட்டி அல்லது வெள்ளை துணியை 10 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 10 சென்டிமீட்டர் நீளம் உடைய இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பிறகு அதில் 27 மிளகுகளை வைத்து கருப்பு நூலால் ஒரு சிறு பொட்டலம் போல் கட்டி கொள்ள வேண்டும்.

Milagu benefits in Tamil

ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் பைரவர் சந்நிதிக்கு செல்லுங்கள். அங்கே தேங்காயை இரண்டாக உடைத்து தேங்காயின் உட்புறம் இருக்கும் ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு துடைத்துக் கொள்ளவும். பின்பு அந்த இரண்டு மிளகு பொட்டலங்களையும் உடைத்து வைத்திருக்கும் இரண்டு தேங்காய் மூடிக்குள் போட்டு, நல்லெண்ணெய்யை ஊற்றி நிரப்பவும்.

coconut-diya1

இரண்டு அகல் விளக்கை பைரவருக்கு எதிரில் வைத்து, அந்த அகல் விளக்கிற்கு மேல் தேங்காயை நிலை நிறுத்தி வைத்து, தீபத்திற்கான திரியை தேங்காயினுள் இடவும். பைரவப் பெருமானிடம் தனது கடன் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு இந்த இரண்டு தேங்காயிலும் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்ய வேண்டும். இவ்வாறு எட்டு சனிக்கிழமைகள் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் எட்டாவது சனிக்கிழமை முடிந்த அடுத்த 90 நாட்களில் உங்களுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர பைரவப் பெருமான் உங்களுக்கு அருள் புரிவார்.