கடையில் வாங்கும் பஜ்ஜி மாவை போலவே இப்படி செய்து வையுங்கள்! தேவையான பொழுது சுவையான பஜ்ஜியை 2 நிமிடத்தில் செய்து அசத்தலாம்!

bajji-mix
- Advertisement -

பஜ்ஜி, போண்டா மிக்ஸ் என்று விதவிதமான பிராண்டுகளில் சுவையான பஜ்ஜி மாவு விற்பனைக்கு வந்துள்ளன. அதை நாம் வீட்டிலேயே எப்படி செய்வது? பஜ்ஜி செய்ய கடலை மாவை பயன்படுத்துவதைப் போல அதனுடன் வேறு என்ன பொருட்கள் எல்லாம் சேர்த்தால் கடைகளில் கிடைக்கும் பஜ்ஜி மாவை போல ருசி அதிகரிக்கும்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

bajji5

பஜ்ஜி என்றாலே நம் நினைவுக்கு வருவது பெண் பார்க்கும் படலம். பெண் பார்க்க வருபவர்களுக்கு பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சுட்டு கொடுப்பது பாரம்பரியமாக செய்து வரும் ஒரு நடைமுறையாகும். அவசர நேரத்திற்கு மாவை கலக்கும் பொழுது சில விஷயங்களை தவறவிட்டு விட்டால் பஜ்ஜியின் சுவை குறைந்துவிடும். எப்பொழுதும் இன்ஸ்டன்ட் ஆக செய்து வைத்துக் கொள்ளும் பஜ்ஜி மாவு நமக்கு அவசர காலத்திற்கு உதவி செய்யும்.

- Advertisement -

இதனை கடைகளில் வாங்காமல் எப்படி நாமே நம் கைகளால் சுலபமாக வீட்டிலேயே அரைத்து வைத்துக் கொள்வது? என்னென்ன பொருட்கள் சேர்த்து பஜ்ஜி மாவு தயார் செய்தால் அதன் ருசி அதிகரிக்கும்? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் நொடியில் சுவையான டீக்கடை பஜ்ஜி செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் வாயை பிளக்க செய்து விடலாம். இந்த மாவை கொண்டு பஜ்ஜி மட்டுமல்ல போண்டா, பக்கோடா கூட செய்து விடலாம். இந்த மாவைக் கொண்டு பஜ்ஜி செய்யும் பொழுது எண்ணெய் அதிகம் குடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

kadalai-maavu

‘பஜ்ஜி மாவு மிக்ஸ்’ செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப், அரிசி மாவு – அரை கப், காஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘பஜ்ஜி மாவு மிக்ஸ்’ செய்முறை விளக்கம்:
கடைகளில் வாங்கும் கடலை மாவு எந்த அளவிற்கு கலப்படமில்லாமல் தரமானதாக இருக்கும் என்பது நமக்கு தெரிவதில்லை. எனவே கடலை மாவை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. கடலை மாவு 2 கப் அளவிற்கு எடுத்து கொண்டால், அரிசி மாவு அரை கப் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். எந்த மாவையும் நீங்கள் பயன்படுத்தும் முன்பு ஒரு முறை சலித்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சிறு கல், குருணை அல்லது பேக் செய்யப்படும் பொழுது அடிக்கப்படும் ஸ்டாப்ளர் பின் போன்றவை இருந்தால் நீங்கிவிடும். இவைகளை சலித்து எடுத்துக் கொண்ட பின்பு அதே சல்லடையில் காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றையும் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கிடைத்த இந்த மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். எனவே மிக்ஸி ஜாரில் ஒருமுறை போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மாவை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் போதும் தேவையான நேரத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து சட்டென உருளைக்கிழங்கு பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி என்று எல்லா பஜ்ஜி வகைகளையும் நொடியில் செய்து அசத்தி விடலாம். காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்ப்பதால் டீக்கடைகளில் இருக்கும் பஜ்ஜியை போலவே செக்க செவேலென சிவப்பாக நல்ல நிறத்துடன் தெரியும். இதற்காக கலர் பவுடர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. பஜ்ஜி மாவுடன் பூண்டு பேஸ்ட் கொஞ்சமாக சேர்த்து கலந்து பஜ்ஜி சுட்டால் இன்னும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

- Advertisement -