தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் இப்படி வைத்து வந்தால் நரைமுடி வரவே வராது. வந்த நரை முடியும் 3 நாட்களில் கருப்பாக மாறுவதை பார்க்கலாம்.

hair11
- Advertisement -

ஹேர் டை போல பயன்படுத்தாமல், வெறும் தேங்காய் எண்ணெயை தினமும் தலையில் தடவி வருவதன் மூலம் நம்முடைய நரை முடியை கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாற்ற முடியும். அதற்கு ஒரு சுலபமான ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அதுவும் மிக மிகக் குறைந்த செலவில். 30 வயதை கடந்தவர்கள் கருப்பாக முடி இருப்பவர்கள், நரை முடியை வராமல் தடுக்க இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். நரைமுடி ஆங்காங்கே இப்பதான் வரத் தொடங்குகிறது என்பவர்களும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். நிறைய முடி நரைத்து விட்டது அதை எல்லாம் கருப்பாக மாற்ற வேண்டும் என்பவர்களும் இந்த எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம். சிறு குழந்தையிலேயே சில பேருக்கு பித்த நரை வந்திருக்கும் அவர்களும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

முதலில் 200ml அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் – காபி தூள், 2 ஸ்பூன் – டீ தூள், 1 ஸ்பூன் – ஹென்னா பவுடர், நமக்கு தேவைப்படும். இந்த எல்லாப் பொருட்களையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் டீ தூளையும், காபி தூளையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை அந்த பாத்திரத்தில் ஊற்றி, மிக்ஸியில் பொடி செய்து வைத்திருக்கும் காபி தூள், டீ தூள் பொடி, மற்றும் ஹென்னா பொடியையும் இந்த எண்ணெயில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இந்த எண்ணெயை 2 லிருந்து 3 நிமிடங்கள் காய விடுங்கள். எண்ணெய் சூடாகி இந்தப் பொருட்களின் சாறு அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கியிருக்கும். 3 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

அதன் பின்பு இந்த எண்ணெயை நன்றாக ஆற விடுங்கள். ஆறிய எண்ணெயை ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இந்த எண்ணெயை, தேங்காய் எண்ணெய் போல தலையில் தடவிவர மூன்றே நாட்களில் உங்களுடைய நரை முடி ஓரளவுக்கு பிரவுன் நிறத்தில் வந்திருக்கும். தொடர்ந்து இந்த எண்ணெயை தலைமுடியில் தடவி வர முழுமையாகவே வெள்ளை முடிகள் கருப்பாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தினந்தோறும் உங்களுக்கு தலையில் எண்ணெய் வைக்கும் பழக்கம் இல்லை என்றால் வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த எண்ணெயை தலையில் வைத்து 2 மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பிளான டிப்ஸ் பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். நரை முடியைப் போக்க இது ஒரு சூப்பர் ஐடியா.

இது தவிர நம்முடைய முடி நரைத்து போவதற்கும், நம்முடைய தோற்றம் சீக்கிரமே வயதான தோற்றத்தை பெறுவதற்கு, உடலில் ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம் தான். நிறைய பழவகைகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பயறு வகைகள், நட்ஸ், இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள், கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது நரைமுடி வரவே வராது. முடி உதிர்வும் குறையும். என்னதான் எண்ணெயை தடவி என்னதான் ஹேர் பேக்கை போட்டாலும் அது 50% வேலை செய்யும் என்றால், மீதி 50% நாம் உட்கொள்ளும் உணவிலும் நம்முடைய ஆரோக்கியமும் அழகும் அடங்கியிருக்கிறது.

- Advertisement -