பல்லி விழுந்த தோஷம் நீங்க உடனே இந்த தீர்த்தத்தை பயன்படுத்துங்கள். தோஷம் தாக்கும் என்ற பயத்தை உடனே நீக்கி விடலாம்

balli
- Advertisement -

கட்டிடம் என்ற ஒன்று இருந்தாலே அந்த இடத்தில் பல்லிகள் நுழைய ஆரம்பித்து விடும். ஒரு சிலர் இல்லங்களில் நிறைய மல்லிகா சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு சில வீடுகளில் பல்லிகளை பார்க்கவே முடியாது. ஆனால் ஏதாவது ஒரு மூலையில் நிச்சயம் பல்லி இருக்கும். ஒரு சிலர் இந்த பல்லிகளை அதிர்ஷ்டம் தரும் உயிரினமாக பார்க்கின்றனர். ஆனால் இன்னொரு சிலர் இவற்றை பார்த்தவுடன் அடித்துக் கொன்று விடுகின்றனர். ஆனால் இந்த பல்லிகளை அடித்துக் கொள்ளுதல் என்பது தீராத பாவத்தை தான் சேர்க்கிறது. பல்லிகள் எப்பொழுதும் உங்களுக்கு வரப்போகும் சுபகாரியம் அல்லது அசுப காரியத்தை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் அதன் அறிகுறியாக சத்தம் எழுப்புகின்றன. ஆனால் இந்த பல்லிகள் திடீரென நம் உடலின் மீது விழுந்து விட்டால் மனது அச்சம் கொள்ளும். இதனால் உண்டாகும் தோஷம் என்னவாக இருக்கும் என்று. எனவே பல்லி விழும் தோஷத்தை அகற்றுவதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பல்லிகளில் பல விதங்கள் இருக்கின்றன. வெள்ளை நிற பல்லி, கருப்பு நிற பல்லி, மர பல்லி, காட்டு பல்லி. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தோஷங்களையும், பலன்களையும் கொடுக்கின்றன. பல்லிகள் சத்தமிடும் திசையை வைத்து நல்ல காரியம் நிகழ போகிறதா? அல்லது தீமை ஏதாவது நிகழப்போகிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

- Advertisement -

எனவே பல்லிகள் சத்தமிடும் பொழுது அவை இருக்கும் திசையையும், எந்த திசையில் இருந்து சத்தம் எழுப்புகின்றன என்பதையும் அவசியம் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பல்லிகள் நமது உடலில் எந்த பகுதியில் விழுகிறதோ அதற்கு ஏற்றார்போல் தோஷங்களும், பலன்களும் இருக்கின்றன.

உடலின் ஒரு சில பகுதிகளில் பல்லிகள் விழுவதன் மூலம் நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் விழுந்தால் நமக்கு தீமையாகவே அமைகிறது. எனவே எப்பொழுதும் பல்லி நமது மீது விழுந்தவுடன் பயம் தான் நம்மை ஆட்கொள்கிறது. இனி என்ன நடக்குமோ? என்ன ஆபத்து வர இருக்கிறதோ? என்ற பயம் நம்மை சூழ்ந்து கொள்ளும்.

- Advertisement -

எனவே பல்லி நம் மீது விழுந்தவுடன் உடனே செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பிறகு இந்த தீர்த்தத்தை பல்லி விழுந்த இடத்தில் முழுவதுமாக நனையும்படி ஊற்றி விட வேண்டும்.

தலையில் விழுந்தால் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். கையில் விழுந்திருந்தால் கையில் ஊற்ற வேண்டும். இவ்வாறு பல்லியை தெரியாமல் மிதித்து விட்டால் இதே தீர்த்தத்தினால் காலையும் முழுவதுமாக கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் எந்த தோஷமாக இருந்தாலும் அவை உங்களை தாக்காமல் உடனே நிவர்த்தியாகிவிடும்.

- Advertisement -