உங்க வீட்டில மூங்கில் செடியை இப்படி வளர்த்தால், அதிர்ஷ்டம் அடித்து கொண்டு ஓடி வரும். மாறாக இப்படி வளர்த்தால், கொஞ்சம் நஞ்சம் இருக்கும் அதிர்ஷ்டம் கூட அடியோடு காணாமல் போய்விடும்.

இந்த மூங்கில் செடியை நிறைய பேர் இப்போது வாஸ்து கோளாறு சரியாக வேண்டும் என்பதற்காக தங்களுடைய வீடுகளிலும் தங்களுடைய அலுவலகத்திலும் வளர்த்து வருகிறார்கள். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். எத்தனையோ வகைகளில் அழகாக மூங்கில் செடிகள் இப்போது நர்சரி கடைகளிலும் விற்கின்றது. ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கிடைக்கின்றது. நீங்கள் அந்த மூங்கில் செடியை உங்களுடைய வீட்டிற்காக எப்படி வாங்கினாலும் சரி அதை உங்களுடைய வீட்டில் எப்படி வைக்க வேண்டும் எப்படி வைக்கக்கூடாது என்பதை பற்றிய சில சின்ன சின்ன டிப்ஸை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bamboo1

நம்முடைய வீட்டில் எந்த காரணத்திற்காக மூங்கில் செடியை வாங்கி வைத்தாலும், அது நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை செய்து கொண்டே இருக்கும். குறிப்பாக நம் வீட்டில் இருக்கக்கூடிய காற்றை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த மூங்கில் செடிக்கு அதிகமாகவே உள்ளது. பொதுவாகவே மரம் இருக்கும் இடத்தில் காற்று சுத்தமாகத்தான் வீசும். இருப்பினும் மூங்கில் செடிக்கு அதில் முதன்மை இடம் உண்டு.

வாஸ்துபடி ஆன்மீக ரீதியாக மூங்கில் செடியில் லஷ்மி வாழ்வதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. மூங்கில் செடியில் மகாலட்சுமி நிச்சயம் குடியிருக்கிறார்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலத்தில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை தங்களுடைய வீட்டில் புழக்கத்தில் வைத்திருந்தார்கள் அதனால் அந்த கால கட்டத்தில் மூங்கில் செடியை தனியாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தது.

bamboo2

கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால் இந்த கண் திருஷ்டி பொறாமை சாஸ்திரம் பரிகாரம் என்பது அவ்வளவாக கிடையாது. நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட தான், வாஸ்து சாஸ்திர ரீதியாக கண்திருஷ்டி ரீதியாக நமக்கு நிறைய தொல்லைகள் வருகிறது அல்லவா?

- Advertisement -

ஆகவே தான் உங்களுடைய வீட்டில் மூங்கில் சம்பந்தப்பட்ட நாற்காலிகள் மூங்கில் சம்பந்தப்பட்ட ஊஞ்சல் இப்படி ஏதாவது ஒரு பொருளை புழக்கத்தில் வைத்துக் கொண்டாலும் நல்லதுதான். அப்படி இல்லை என்றால் சிறியதாக மூங்கில் செடியை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சிறிய கண்ணாடி குடுவையில், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை மூழ்க வைத்து மூங்கில் செடியை வளர்த்தாலும் சரி, அல்லது மண்ணில் போட்டு அந்த மூங்கில் செடியை வீட்டிற்குள் சிறிய தொட்டியில் வளர்த்தாலும் சரி, மூங்கிலின் வேர் அழுகாமல், மூங்கில் செடி பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

mahalakshmi2

மூங்கில் செடி வளர்க்கக் கூடிய தொட்டிக்கு நடுவே ஒரு சிறிய கிண்ணத்தில் தங்க நாணயத்தை வைக்கலாம். எங்களிடம் தங்க நாணயங்களே இல்லை என்று சொல்பவர்கள், தங்கத்தில் உங்களிடம் எந்த ஆபரணம் இருந்தாலும், அதில் ஒரு சிறிய திருகாணியாவது, சிறிய கிண்ணத்தில் போட்டு அந்த மூங்கில் இருக்கும் தொட்டிலில் நடுவே வைத்து பராமரித்து வாருங்கள். இதுவும் இல்லையென்றால் ஒரு ஐந்து ரூபாய் தங்க நிறத்தில் இருக்கும் நாணயத்தையாவது மூங்கில் செடியில் போட்டு வையுங்கள்.

five-rupee-coins

மூங்கில் செடியை இருக்க கட்டுவதற்கு சில இடங்களில் சிவப்பு நிறத் நூல் பயன்படுத்துவார்கள். உங்கள் வீட்டிற்கு நீங்கள் மூங்கில் செடியை வாங்கி வந்த பிறகு, அந்த கயிறை மஞ்சள் நிறத்தில் மாற்றி கட்டிக்கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இந்த மூங்கில் செடியின் தண்ணீரை மாற்றினால் போதும். தண்ணீரில் வளர்த்து வருபவர்கள்!

bamboo3

மூங்கில் செடிக்கு உப்புத் தண்ணீரை ஊற்றக்கூடாது. நாம் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி வளர்த்தால், மூங்கில் செடி செழிப்பாக வளரும். மூங்கில் செடி செழிப்பாக வளர வளர, அந்த செடி எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடமும் செழிப்பாக வளரும். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டின் வரவேற்பறையில் அழகான மேஜையின் மீது இதை வைக்கலாம். அலமாரிகளில் வைக்கலாம். அலுவலகமாக இருந்தால் முதலாளி அமரும் நாற்காலிக்கு முன்னே இருக்கும் டேபிள் மீது, எல்லோர் கண்ணிலும் படும்படி இந்த செடியை வைப்பது மிகவும் நல்லது.

bamboo4

மூங்கில் செடியை வாங்கி வைத்துவிட்டு பராமரிக்காமல் அந்தச் செடியை சீராக வளராமல், உங்களுடைய வீட்டில் இருந்தால் அது உங்களுடைய வீட்டிற்கு கஷ்டத்தை தான் கொடுக்கும். பராமரிக்க முடிந்தவர்கள் செடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பராமரிக்க முடியவில்லை என்றால் அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதிர்ஷ்டத்தை போக்கக்கூடிய, எந்த ஒரு காரியத்தையும் நம்முடைய வீட்டில் நம் கைகளால் செய்யவே கூடாது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.