காலை உணவுக்கு பதில் 1 டம்ளர் இந்த ட்ரிங்க் மட்டும் குடித்து பாருங்களேன்! உங்கள் முடி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கருகருவென அடர்த்தியாக வளர தொடங்கும்.

hair-fall-control-smoothie
- Advertisement -

முடியை உதிராமல் அடத்தியாக வளரச் செய்வதற்கு வெறும் எண்ணெயும், ஹேர்பேக் மட்டும் போதாது. நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை உணவுக்கு பதிலாக, காலை உணவை தவிர்த்துவிட்டு, ஒரு டம்ளர் இந்த ஜூஸை குடுத்து பாருங்க. முடி உதிர்வு சில நாட்களிலேயே குறையும். முடி அடர்த்தியாக வளரவதை சில நாட்களிலேயே கண்கூடாக நம்மால் காண முடியும்.

shedding-hair

காலை உணவை தவிர்த்து விட்டு ஒரு டம்ளர் இந்த ஜூஸை மட்டும் குடித்தால் பசி அடங்குமா? என்று நினைக்காதீர்கள். இதில் நாம் சேர்க்கபோகும் பொருள் நம் பசியை கட்டுப்படுத்தி உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் தான். பயம் இல்லாமல், காலை உணவை தவிர்த்துவிட்டு இதை குடிக்கலாம்.

- Advertisement -

காலை உணவோடு சேர்த்து இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கலோரிகளும் அதிகரித்து, உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் தான் காலை உணவை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. சரி இந்த ஸ்மூதியை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

verkadalai

முதலில் இந்த ஜூஸை தயார் செய்ய தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். வறுத்த வேர்கடலை – 4 டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு – 10 லிருந்து 15, நன்றாக பழுத்த வாழைப்பழம் – 1, அவ்வளவுதான். மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வறுத்த வேர்க்கடலையும், பாதாம் பருப்பையும் போட்டு முதலில் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம்.

- Advertisement -

அதன் பின்பு நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தை தோலுரித்து மிக்ஸியில் இருக்கும் பொடியோடு சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து விட வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான ஸ்மூதி ஜூஸ் தயார். அப்படியே இதை ஒரு டம்ளரில் மாற்றி குடித்து விட வேண்டியது தான். உங்களுக்கு தேவைப்பட்டால் இதில் கொஞ்சமாக பால் கலந்தும் குடிக்கலாம். கொஞ்சம் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம். அது உங்களுடைய சுவையின் விருப்பத்திற்க்கு ஏற்றது.

hair-fall-control-smoothie1

வாரத்தில் ஏழு நாட்களும் இதைக் குடித்தால் மிகமிக நல்லது. வாரத்தில் ஏழு நாட்கள் இதை பின்பற்ற முடியாதவர்கள், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமாவது காலை உணவை நிறுத்திவிட்டு இதை குடித்து பாருங்கள். நிச்சயமாக முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும்.

banana1

வேர்க்கடலையில் இருக்கக்கூடிய பயோடின் சத்து முடி உதிர்வதை உடனடியாக கட்டுப்படுத்துகிறது. பாதாமில் இருக்கக்கூடிய மெக்னீசியம் நியூட்ரீஷியம் சத்து முடியை உடையாமல் அடர்த்தியாக வளரச் செய்கின்றது. பழுத்த வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இதனால் முடி சாஃப்ட்டாக, உறுதியாகவும் வளரும். முடி எப்போதும் வறட்சியாக இருக்காது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றிவிட்டு ரிசல்ட் தெரியல என்று சொல்லக்கூடாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் இதை பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -