டீனேஜில் இருக்கும் அனைத்து ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெரிய பிரச்சினையாக இருப்பது தான் முகப்பரு. இந்த முகப்பருவை நீக்குவதற்கு பல விதங்களில் முயற்சி செய்தாலும் அவை முழுமையாக நீங்குவது கிடையாது. அப்படியே முகப்பரு மறைந்தாலும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்கள் மறையாமல் நிரந்தரமாக முகத்திலேயே இருந்து விடும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகப்பருவை நீக்கவும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் மறையவும் உதவக்கூடிய வாழைப்பழ ஃபேஸ் பேக்கை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பருக்கள் என்பது ஹார்மோனின் மாற்றங்களினால் ஏற்படக்கூடியது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முக துவாரங்களில் தூசுகள் படிவதால் அந்த தூசுகளை வெளியேற்றுவதற்காக பருக்கள் உருவாகிறது. இந்த பருக்களை நாம் நம்முடைய நகங்களை வைத்து கிள்ளக்கூடாது. அப்படி கிள்ளினால் அது வடுவாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த வடுக்களால் முகத்தின் அழகே சீர்குலைந்து விடுவது போல் தோன்றும். இவை அனைத்தையும் சரி செய்வதற்கு வாழைப்பழ தோலை பயன்படுத்தும் முறையை பார்ப்போம்.
வாழைப்பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கிறது. அன்றாடம் நம்முடைய உணவில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் பெறும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி நாம் சாப்பிட்டுவிட்டு தூரப்போடும் வாழைப்பழத் தோலில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. தோலின் உள்பகுதியை முகத்தில் தடவினாலே முகத்திற்கு ஒருவித பொலிவு கிடைக்கிறது. பற்களில் இந்த தோலை தேய்ப்பதன் மூலம் பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் கறைகள் அனைத்தும் நீங்கி பற்கள் வெண்மை நிறம் அடையும்.
மேலும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு இந்த தோலை முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து பேண்டேஜ் போட்டு ஒட்டிக்கொள்வதன் மூலம் முகப்பருக்கள் மறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் மறைகிறது என்று கூறப்படுகிறது. மேலும் கண்களுக்கு கீழ் வைப்பதன் மூலம் கண் கருவளையம் மறையும். இவ்வாறு இரவு முழுவதும் முகத்தில் வைத்திருக்க முடியாது தூங்கும்பொழுது இந்த தோல் கீழே விழுந்துவிடும் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு அருமையான ஃபேஸ் பேக்.
நன்றாக பழுத்த அதேசமயம் கருத்துப் போகாத வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு அதன் தோலை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு அதனுடன் சிறிது வாழ பழத்தையும் போட்டு மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்டில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த பேஸ்ட் கெட்டியாக இல்லாமல் தண்ணீராக இருக்கும். இதை முகத்தில் தடவ முடியாது.
அதனால் அதைக் கெட்டி ஆக்குவதற்கு கடலை மாவு அல்லது அரிசி மாவு இரண்டில் ஏதாவது ஒன்றை போட்டு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதை எடுத்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் இது முகத்திலேயே இருக்கட்டும். பிறகு இதை குளித்த நீரினால் நன்றாக கழுவுங்கள். கழுவிய பிறகு உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உங்களால் நன்றாக உணர முடியும்.
இதையும் படிக்கலாமே: முக அழகை பாதுகாக்க டிப்ஸ்
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறியும் பழக்கம் இருப்பவர்கள் இனிமேல் அந்தத் தோலை தூக்கி எறியாமல் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.