உங்கள் வாழ்க்கையின் ரகசியத்தை 12 கட்டங்கள் எப்படி சொல்கிறது தெரியுமா?

astrology

ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 கட்டங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் மொத்த ரகசியத்தையும் எடுத்துரைக்கிறது. ஒருவர் எப்படிபட்டவர்? அவரது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்க போகிறவை என முக்காலத்தையும் சொல்கிறது. 9 கிரகங்களில் நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் என்று பிரிக்கபட்டிருக்கும். அதில் நல்ல கிரகம் அமைந்திருக்கும் கட்டம், அந்த கட்டத்தை பார்வையிடும் கிரகத்தின் தன்மையை பொறுத்தே பலன்கள் இருக்கும். மேலும் கட்டத்தின் ராசியாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்? என்பதும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டால் தான் சுலபமாக இருக்கும். ஒருவர் செய்த பாவ, புண்ணிய பலன்கள் அடிப்படையில் ஜாதகம் அமைய பெற்றிருக்கும். அவற்றில் எந்த கட்டத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் எதை பற்றிய ரகசியத்தை கூற முடியும் என்பதை குறித்த அடிப்படை ஜோதிடத்தை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

jathagam astro

கட்டம் 1 :
ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது. மற்றவர்கள் அவரை பார்க்கும் விதம் எப்படி இருக்கும்? தனிப்பட்ட பெருமைகள், விழிப்புணர்வு ஆகியவற்றை குறிக்கிறது. அவர் வாழ்க்கையில் எந்த இடத்திற்கு செல்வார்? எந்த நாட்டில் இருப்பார்? அவருடைய குணாதிசயம் எப்படிப்பட்டது? என்பதை சொல்லி விடும்.

கட்டம் 2 :
ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் கட்டம் என்பது குடும்பம், வாக்கு, தனம் ஆகியவற்றை குறிக்கிறது. குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், பேசும் திறன் இவற்றை பற்றி சுலபமாக கூறி விடும். நல்ல கிரகங்கள் இந்த கட்டத்தில் இருந்தால் நல்ல பலன்கள் இருக்கும். தீய கிரகங்கள் இருந்தால் பலன்களும் அது போல் தான் இருக்கும்.

astro

கட்டம் 3 :
மூன்றாம் கட்டம் என்பது உங்களுக்கு அடுத்து பிறக்கும் சகோதரம், தைரியம், வெற்றி, அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி சொல்லிவிடும். இங்கே அமர்ந்திருக்கும் கிரகத்தினுடைய ஆற்றல் எப்படி பட்டதோ அப்படி பட்டவராக நீங்கள் இருப்பீர்கள். செவ்வாய் மிகவும் தைரிய கிரகம் ஆவார். எனவே ஜாதகரும் வீரமிக்கவராக இருப்பார். சனி பகவான் மந்தன் ஆவார். எனவே சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார்கள். கிரகங்களின் பார்வை பலத்தை வைத்து இந்த வழியில் பலன்கள் அமையும். தீய பார்வை பட்டால் சகோதரருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

- Advertisement -

கட்டம் 4 :
நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் நாலில் செவ்வாய் இருந்தால் எப்படியும் வீடு யோகம் உண்டு. எனினும் நல்ல கிரகங்கள் அமைந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பலம் இருந்தாலோ நல்ல பலன்கள் கிடைத்து சொத்து சுகத்தோடு இருப்பார்கள். தீய கிரகங்கள் இருந்தால் தாயாருக்கு ஆபத்து நேரலாம். தாயன்பு கிடைக்காமல் போகலாம்.

Astrology

கட்டம் 5 :
ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். குழந்தை பாக்கியம் பற்றியும், போன ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களை பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றை குறிப்பது. இங்கு எந்த கிரகம் இருந்தாலும் அதன் தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் தோஷங்கள் உண்டாகும்.

கட்டம் 6 :
ஆறாம் கட்டம் நோய், கடன், தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். ஆறாம் வீட்டில் சரியான கிரகங்கள் இல்லாவிட்டால் உடல் நலனில் பிரச்சனைகள் இருக்கும். கடன் தொல்லைகள் இருக்கும். வேலையில் பிரச்சனைகள் உண்டாகும். தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் இதில் மாறுதல்களை உண்டாகும்.

Astrology

கட்டம் 7 :
ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், மரணம் போன்றவற்றை குறிப்பன. இங்கு தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது அவைகளின் பார்வை பலம் இருந்தாலோ திருமணத்தில் தடை ஏற்படும். வியாபார வளர்ச்சி இருக்காது, மரணம் சாதாரணமாக இருக்காது.

கட்டம் 8 :
எட்டாம் கட்டம் ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். எட்டில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். எட்டாம் வீட்டில் சனி மற்றும் குரு இருந்தால் தீர்காயுள் கிட்டும்.

astrology

கட்டம் 9 :
ஒன்பதாம் கட்டம் தந்தையை குறிக்கும். இங்கு தீய கிரகங்கள் இருந்தால் தந்தையுடன் பிரச்சனைகள் இருக்கும்.

கட்டம் 10 :
பத்தாம் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது. பத்தில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். உதாரணத்திற்கு ராசியாதிபதி லக்னத்தில் இருந்தால் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். சொந்தக் காலில் நிற்பதை விரும்பக் கூடியவர்கள்.

astrology

கட்டம் 11 :
பதினோராம் கட்டத்தில் இருக்கும் கிரகம் அல்லது ராசியாதிபதி சரியாக அமையவில்லை என்றால் சம்பாரிக்கும் பணம் அனைத்தும் வீண் விரையமாகிவிடும். ஏனெனில் இது தான் லாபஸ்தானம் ஆகும்.

கட்டம் 12 :
பணிரெண்டாம் கட்டம் மோட்சஸ்தானம் ஆகும். விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். பனிரெண்டில் அமரும் கிரகங்கள் பொறுத்து பலன் இருக்கும். உதாரணத்திற்கு சனி பகவான் வந்து அமர்ந்தால் பாவங்கள் செய்பவராக இருப்பார்கள். நஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே
கரிநாளில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாதா? ஏன்? கரிநாளில் அப்படி என்னதான் இருக்கிறது?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Jathagam parka Tamil. Jathagam kattangal Tamil. Jathagam kanippu Tamil. Jathagam palangal Tamil.