நாகம் காக்கும் இந்த அறையை திறந்தால் உலகம் அழிவது உறுதியா? பதறும் பக்தர்கள்

Padmanabhaswam_Door

பத்மநாபசுவாமி கோவில் பற்றி நம்மில் பலரும் முன்பே கேள்விப்பட்டிருப்போம். கலியுகத்தின் ஆரம்பகாலத்திலேயே இந்த கோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்புக்கள் உள்ளன. அப்படியானால் அதன் பழமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இந்த கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் இதுவரை 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

padmanabha-swamy temple

திறக்கப்பட்ட அந்த அறைகளில் இருந்து வெள்ளி, தங்கம்,வைர வைடூரியம் என பல பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டு பலரையும் வாய் பிளக்க வைத்துவிட்டது. கிட்டதட்ட 2 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த பொக்கிஷங்களை சிலர் நாட்டுக்காக பயன்படுத்தவேண்டும் எனவும் இன்னும் சிலர் இது மன்னர் சொத்து என்பதால் கோயிலுக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறிவந்தனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த கோவிலின் கடைசி அறையில் உள்ள பொக்கிஷத்தின் மதிப்பு மற்ற அறைகளில் கண்டெடுக்கப்பட்டவையை விட மிக மிக அதிகம் என்று கூறப்படுகிறது. அனால் இந்த அறை இன்னும் திறக்கப்படவில்லை. வாருங்கள் இந்த கோவிலை பற்றி சில தகவல்களையும் அந்த கடைசி அறையின் மர்மங்களை பற்றியும் பார்ப்போம்.

bathmanabaswamy temple

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்த கோவில் பகவான் விஷ்ணுவின் ஆலயமாகும். இதை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சேரர் வழி வந்தவர்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

- Advertisement -

bathmanabaswamy

இந்த கோவிலில் உள்ள மர்ம அறைகளில் சேம்பர் பி என அழைக்கப்படும் அறை இன்னும் திறக்கப்படவில்லை. அது மற்ற அறைகளை போல் அல்லாமல் பகவான் விஷ்ணுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுவரை திறக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து 500 கிலோ நகைகள் , 18 அடி உயரம் உடைய ஒரு  பெரிய பை முழுவதும் தங்க நாணயங்கள் என பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதை விட கிட்டதட்ட ஐந்து மடங்கு அதிக பொக்கிஷம் இருக்கும் என்று நம்பக்கூடிய சேம்பர் பி அறை ஏன் இன்னும் திறக்கப்படவில்லை? அதில் அப்படி என்ன தான் மர்மம் ஒளிந்திருக்கிறது என்றல்? இந்த அறையை திறந்தால் நிச்சயம் உலகம் அழியும் என்று பத்மநாபசுவாமியின் பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

bathmanabaswamy

இந்த அறை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்த்தாண்ட வர்மன் என்னும் அரசனால் உருகாவப்பட்டது என்றும் இதை சாதாரண மனிதர்களால் திறக்க முடியாது என்றும்.

நாக பந்தத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர் கருட மந்திரத்தை ஜபித்தால் மட்டுமே இந்த அறை திறக்கப்படும் எனவும். இதை தவிர இதை திறக்க வேறு வழியே இல்லை என்றும் கூறுகின்றனர். அதையும் தாண்டி சாதாரண மனிதர்கள் யாரேனும் இதை நவீன இயந்திரம் கொண்டு திறக்க முயன்றால் பேரழிவு நிச்சியம் என்று நம்பப்படுகிறது.

சில காலங்களுக்கு முன் மந்திரங்கள் தெரிந்த ஒருவர் இதை திறக்க முயன்றதாகவும் ஆனால் அவரால் இதை திறக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். கதவுகளை நாகம் காவல் காப்பதால் மந்திரத்தை சரியாக ஜபித்தால் மட்டுமே கதவு திறக்கப்படுமாம்.