5 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ், வாஷ்பேஷன், சிங்கில் படிந்திருக்கும் கறைகளை சுத்தம் செய்ய சுலபமான டிப்ஸ்.

bathroom-tiles-cleaning

நம்முடைய வீட்டில் உபயோகப்படுத்தும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருந்தால், குளியலறை சமையலறையை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் அந்த இடத்தில் உப்பு தண்ணீர் கறை படியத்தான் செய்யும். வாரத்தில் இரண்டு நாட்களாவது குளியலறை தரையையும், சுவரில் ஒட்டியிருக்கும் டயல்சைய்யும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கறைகள் மிகவும் அடர்த்தியாக படியாமல் இருக்கும். தினம்தோறும் நம் வீட்டு குளியலறை, சமையல் அறையில் இருக்கும் சிங்க், வாஷ்பேஷன் இவைகளை சுத்தம் செய்ய எளிமையான முறையில் ஒரு பவுடரை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bath-room-cleaner

சலவை சோடா – 50 கிராம், பேக்கிங் சோடா – 50 கிராம், தூள் உப்பு – 25 கிராம், எலுமிச்சை பழச்சாறு – 4 டேபிள் ஸ்பூன் (2 எலுமிச்சம் பழங்களை வெட்டி அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்), அடுத்தபடியாக வாசனைக்கு ஜவ்வாது பொடி அல்லது உங்கள் வீட்டில் எசன்ஷியல் ஆயில் ஏதாவது இருந்தால் அதையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் சலவை சோடா, பேக்கிங் சோடா, உப்பு, வாசனை திரவியம் இந்த நான்கு பொருளை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அதன்பின்பு தயாராக வைத்திருக்கும் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி கட்டி படாமல் கலக்கி விடுங்கள். இதை அப்படியே இரண்டு மணி நேரம் வெயிலில் வைத்தால் ஈரப்பதம் போக காய்ந்துவிடும்.

toilet-cleaning

இதை எடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் அழுக்கு படிந்த இடங்களை சுத்தம் செய்ய இந்த பவுடர் உபயோகமானதாக இருக்கும். சாதாரணமாக படிந்து இருக்கும் உப்பு கறைகள் என்றால் இதை ஒரு முறை போட்டு சுத்தம் செய்தாலே போதும். எப்படி சுத்தம் செய்வது.

- Advertisement -

முதலில் பாத்ரூமில் இருக்கும் தண்ணீரை எல்லாம் சுத்தமாக துடைப்பத்தை வைத்து தள்ளி விட்டு விடுங்கள். தரையில் தண்ணீர் இருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் ஓடும் அளவிற்கு ஊற்றக்கூடாது. ஈரப்பதத்தில் இருக்கும் தரையின் மேல் இந்த பவுடரை தூவி ஒரு பிரஷ்ஷை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே ஊறியதும், லேசாக துடைப்பத்தால் தேய்த்து கழுவினால் அழுக்கு முற்றிலுமாக நீங்கிவிடும்.

hard-water

மிகவும் உப்புத்தண்ணீர் படிந்த கறைகளாக இருந்தால், முதலில் வினிகரை நேராக அந்த உப்பு தண்ணீர் கறையின் மீது ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். அதன் பின்பு ஒரு கூர்மை குறைவான கத்தியை எடுத்துக் கொண்டு அந்த உப்புத் தண்ணீர் கறைகள் படிந்திருக்கும் இடங்களை சுரண்டி எடுத்தால் சுலபமாக உப்புத்தண்ணீர் கறை லேயர் லேயராக வந்துவிடும். எந்த கெமிக்கல் ஆசிடை பயன்படுத்தாமல் உங்கள் வீட்டில் இருக்கும் உப்பு தண்ணீர் கரையை சுலபமாக நீக்க வேண்டுமென்றால் கத்தியைக் கொண்டு சுரண்டி எடுப்பது தான் ஒரே வழி.

cleaning5

மற்றபடி நீண்டநாட்களாக படிந்திருக்கும் உப்பு கரையை சுலபமாக ஆசிட் ஊற்றாமல் நீக்குவது கடினமான ஒரு விஷயம். உப்புத்தண்ணீர் படியாமல் பார்த்துக் கொள்ள மேலே சொல்லப்பட்டுள்ள பொடியை பயன்படுத்தி சுத்தம் செய்து வந்தால், உப்பு தண்ணீர் கறை படிப்படியாகத்தான் நீக்கமுடியும். இந்த பவுடர் உப்புத்தண்ணீர் கரையை மீண்டும் படியாமல் பார்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.