பாத்ரூம் பிவிசி டோர் மற்றும் டைல்ஸ் கிளீன் செய்ய ரொம்ப ரொம்ப சுலபமான முறை இதுதாங்க! 10 நிமிடத்தில் மொத்த பாத்ரூம் கிளீன் செய்து விடலாம்.

bathroom-cleaning1
- Advertisement -

வீட்டில் இருக்கும் வேலையில் மிக கடினமான வேலை என்றால் அது பாத்ரூம் கிளீன் செய்யும் வேலை தான். என்ன தான் மெனக்கெட்டு ஸ்கிரப்பர் போட்டு சோப்பு போட்டு தேய்த்து எடுத்தாலும் அதில் இருக்கும் அழுக்குகள் விடாப்பிடியாக படிந்து நம்மை பாடாய்படுத்துமே தவிர நீங்குவதில்லை. இப்படி விடாப்பிடியான உப்பு கறை மற்றும் சோப்பு கறைகளை கூட நிமிடத்தில் நீக்கக்கூடிய அற்புதமான ஒரு சக்தி இந்த சில பொருட்களுக்கு உண்டு. அப்படியான பொருட்கள் என்ன? அதை வைத்து எப்படி ரொம்ப சுலபமான முறையில் பிவிசி டோர் மற்றும் பாத்ரூம் டைல்ஸ் கிளீன் செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

pvc-door

இப்போதெல்லாம் குளியலறைக்கு பெரும்பாலும் பிவிசி டோர் பயன்படுத்தபடுகிறது. நாம் குளிக்கும் போது தெறிக்கும் சோப்பு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து நாளடைவில் பிவிசி டோர் அதன் நிறத்தை இழந்து மிகவும் அசிங்கமாக காட்சி அளிக்க ஆரம்பிக்கும். பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். சோப்பு தண்ணீர் மட்டுமல்லாமல், உங்கள் வீட்டு தண்ணீரில் இருக்கும் உப்பு கறையும் படிந்து பாத்ரூம் வாளி, கதவுகள், டைல்ஸ்கள் என்று அத்தனையும் அழுக்கு படிந்து காணப்படும்.

- Advertisement -

எப்பொழுதும் இவற்றையெல்லாம் வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்து விடுவது நமக்கு நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தி கொடுக்கும். இல்லையென்றால் அதை சுத்தம் செய்வதற்கு மிக மிக கடினமாக இருக்கும் எனவே கூடுமானவரை 10 நாட்களுக்கு ஒரு முறையாவது பாத்ரூம் கதவு மற்றும் டைல்ஸ்களை இந்த முறையில் தேய்த்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் மிகவும் சுலபமான வேலையாக தெரியும். பத்து நிமிடத்தில் மொத்த பாத்ரூம் கிளீன் செய்து அசத்தி விடலாம். சரி அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்று பார்ப்போம்.

washing-powder

ஒரு சிறிய வாளியில் 2 டேபிள் ஸ்பூன் வாஷிங் பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பவுடர் எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை. துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பு தூள் 2 டேபிள் ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஆப்ப சோடா எனப்படும் சமையல் சோடாவை ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு பெரிய எலுமிச்சையில் இருக்கும் சாற்றை முழுவதுமாக பிழிந்து விடுங்கள். நுரை நன்கு பொங்கி மேலெழும்பி வரும்.

- Advertisement -

எலுமிச்சையில் இருக்கும் விதைகளை நீக்க வேண்டிய அவசியமில்லை. அதனுடன் கொஞ்சம் நீங்கள் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் சேர்த்து கொள்ளுங்கள். இவை நான்கும் சேர்ந்த கலவையை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நீங்கள் தேங்காய் நார் அல்லது ஸ்க்ரப்பர் அல்லது இரும்பு நார் கொண்டு பாத்ரூம் முழுவதையும் தொட்டு தொட்டு விடாப்பிடியாக இருக்கும் அழுக்குகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும்.

cleaning5

கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்தாலே போதும் உப்புக்கறை, சோப்புக்கறை என்று எதுவாக இருந்தாலும் எளிதாக நீங்கி விடும். ஒரு பத்து நிமிடம் பாத்ரூம் டைல்ஸ், பாத்ரூம் வாளி மற்றும் பாத்ரூம் பிவிசி டோர் அனைத்து இடங்களிலும் அழுத்தம் கொடுத்து மடமடவென தேய்க்க வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம். புத்தம் புதிய பாத்ரூம் போல எல்லா இடங்களும் பளிச்சென மின்னும்.

- Advertisement -