எந்த செலவும் இல்லாமல் உங்கள் ‘பாத்ரூம்’ வருடம் முழுக்க வாசனையாக இருக்க இந்த 4 பொருள் போதுமே!

bathroom

நம்ம வீட்டையும், பாத்ரூமையும் எவ்வளவு தான் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் எப்போதும் ஒருவித நறுமணம் வீசிக் கொண்டே இருப்பது நல்லது. நம்முடைய வீட்டின் பிரதான அறைகளை நறுமணம் மிக்க பூஜைப் பொருட்கள் கொண்டு வாசனையாக வைத்துக் கொள்ள முடியும். அதே போல் நம்முடைய பாத்ரூமை எப்போதும் வாசனையாக வைத்துக் கொள்வதற்கு நாம் அதிக விலை கொடுத்து பாத்ரூம் ஃபிரெஷ்னர், ஓடோனில் போன்றவற்றை வாங்கி மாட்டி வைக்கிறோம். இது நீங்கள் வாங்கியதும் சிறிது நாட்கள் வரை நன்றாக மணம் வீச கூடியவையாக இருக்கும். ஆனால் ஒரு மாதம் கூட முழுமையாக உங்களுக்கு நறுமணத்தை அளிக்காது என்பது தான் உண்மை.

room-freshner-odonil

நாம் சுலபமாக நம்முடைய வீட்டில் இருக்கும் இந்த நாலு பொருட்களை மட்டும் வைத்து வருடம் முழுவதும் நம்முடைய பாத்ரூமை நறுமணமாக வைத்துக் கொள்ள முடியும். அதெப்படி நாலு பொருட்களை மட்டும் வைத்து செய்வது என்று யோசிக்கிறீர்களா? என்ன ரொம்ப ஆச்சரியமா இருக்கா? ஆமாங்க உண்மை தான், அதை எப்படி செய்வது? எந்த மூலப் பொருட்களை கொண்டு நாம் செய்ய முடியும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடா என்பது எப்போதும் அதனை சுற்றி இருக்கும் எந்த வித துர் நாற்றத்தையும் போக்க வல்லது. பேக்கிங் சோடாவை பிரதானமாக வைத்து தான் நாம் இதை செய்ய போகிறோம். பேக்கிங் சோடா 3 டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் வாசனையை உண்டாக்கக் கூடிய வாசனை திரவியத்தை சேர்க்க வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் சென்ட், ஜவ்வாது அல்லது அத்தர் போன்ற பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு 5 டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

baking-soda5

பேக்கிங் சோடாவுடன் சென்ட் சேர்த்ததும், அதன் நிறத்திற்காக உங்கள் வீட்டில் இருக்கும் ஃபுட் கலர் அல்லது ரோஸ் எசன்ஸ் எது இருந்தாலும் அதை சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூன்றும் நன்றாக ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு நாம் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் கம், அதாவது பசை அதை தேவையான அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு ஸ்பூன் வைத்து நீங்கள் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அது உடனே காய்ந்ததும் மறுபடியும் சிறிதளவு கம் சேர்த்து கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த கலவை தயாரானதும் உங்களுக்கு கெட்டியாக இருக்காது. அதனால் அதை ஒரு சிறிய கப்பில் போட்டு அழுத்தி விடுங்கள். 24 மணி நேரம் கழித்து அதை நீங்கள் எடுத்து பார்த்தால் கெட்டியாக இறுகிவிட்டிருக்கும். அவ்வளவு தாங்க நமக்கு தேவையான நறுமணமிக்க நாமே செய்யக் கூடிய ‘பாத்ரூம் ஃபிரெஷ்னர்’ கிடைத்து விட்டது. இதை நீங்கள் ஓடோனில் வைக்கும் அட்டைப் பெட்டியில் வைப்பது போல் தயார் செய்து பாத்ரூமில் மாட்டி வைக்கலாம்.

bathroom-freshner

நாம் கடைகளில் வாங்கும் பாத்ரூம் ஃபிரெஷ்னர்கள் கரைந்து விட கூடிய தன்மை கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் இது அவ்வளவு சீக்கிரமாக கரைந்து விடாது. அப்படியே இருக்கும் அதனால் இதன் பயன் நமக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஆனால் அவ்வபோது அதை வெளியே எடுத்து வாசனை திரவியங்களை கொண்டு ஸ்பிரே செய்து கொள்ளுங்கள் போதும். இதற்காக நாம் மாதா மாதம் ஒரு தொகையை செலவிட வேண்டியதில்லை. ஒருமுறை செய்து விட்டால் போதும் ஒரு வருடம் வரை அப்படியே இருக்கும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் செய்து பலன் கூறுங்கள்.

இதையும் படிக்கலாமே
மொத்தமா 20 நிமிசத்தில் உங்க ஃப்ரிட்ஜை சுத்தம் செய்து முடித்திடலாம். உங்க வீட்டு பிரிட்ஜ் எப்போதுமே துர்நாற்றம் வீசாமல் இருக்க சின்ன டிப்ஸ்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.