உங்க வீட்டு பாத்ரூம் டைல்ஸை ஒரே நிமிஷத்தில் சுத்தம் செய்துவிடலாம். இது போட்டு சுத்தம் செய்தால், டைல்ஸில் தண்ணிர் ஊற்றினாலும் வழுக்காது!

bathroom-tiles-cleaning
- Advertisement -

பொதுவாகவே, நம் வீட்டை சுத்தம் செய்வதைவிட, நம் வீட்டில் இருக்கும் பாத்ரூமை சுத்தம் செய்வதுதான் பெரிய வேலையாக இருக்கும். சிலருக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை வைத்து பாத்ரூமை சுத்தம் செய்யவே முடியாது. மூக்குக்குள் புகுந்து கொள்ளும். தொண்டை கட்டிக்கொள்ளும். பாத்ரூமை சுத்தம் செய்வதற்குள், பல பிரச்சனைகளில் அவதிப்படுவார்கள்.

toilet-cleaning

இப்படிப்பட்டவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும், ஒரு பொருளை வைத்து தான், நம்முடைய குளியலறை டைல்ஸ் சுத்தம் செய்யப் போகின்றோம். அது என்ன என்பதைப் பற்றியும், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், சுத்தம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய பயன்கள் என்னென்ன என்பதை பற்றியும், தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

உங்க பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்ய, உங்க வீட்ல இருக்கிற கோலமாவு பொடி மட்டுமே போதும். அதாவது கடையிலிருந்து வாங்கிவந்த கோலமாவு பொடியில் அரிசி மாவு எல்லாம் சேர்க்கக்கூடாது. தனி கோலமாவு பொடியை கொஞ்சமாக எடுத்து, பாத்ரூம் டைல்ஸ் தூவி, துடைப்பத்தாலோ அல்லது பிரஷினாலோ தேய்த்தாலே, போதும். நரநரவென்று இருக்கும் பொடியானது, உங்கள் பாத்ரூம் டைல்ஸில் இருக்கும் எல்லா விதமான பிசுபிசுப்பு, அழுக்குகளையும் இரண்டே நிமிடத்தில் போக்கிவிடும்.

kolamaavu

முடிந்தவரை டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ் போன்று, பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய தனியாக ஒரு ப்ரஷை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து பாத்ரூம் டைல்ஸை தேய்த்து கழுவினால் சுலபமாக அழுக்கு போய்விடும். கோலமாவு தூவும் போது, டைல்ஸில் தண்ணீர் அதிகமாக இருக்கக்கூடாது. லேசாக தண்ணீர் தெளித்து பிரஷில் லேசாக தேய்த்தாலே போதும்.

- Advertisement -

இப்படி கோலப் பொடியை போட்டு, பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வதன் மூலம், அந்த டைல்ஸில், வழுவழுப்பு தன்மை குறையும். அதாவது தண்ணீர் ஊற்றி, கால் வைத்தாலும் வழுக்காது. உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாத்ரூமில் இனி அடிக்கடி வழுக்கி விழ மாட்டார்கள்.

tiles

நிறைய பேர் வீடுகளில் பாத்ரூம் எப்போதும் கொழகொழப்பு தன்மையுடன், காயாமலேயே இருக்கும். அதாவது உபயோகப்படுத்தாமல் இருக்கும் பாத்ரூமானது, விரைவாக காய்ந்தால் தான் அந்த இடத்தில் அழுக்கு இல்லை என்று அர்த்தம். அழுக்கு இருக்கும் பட்சத்தில் தண்ணீர் சீக்கிரமாக காயாது. கோலப் பொடியை வைத்து சுத்தம் செய்தால் உங்களது பாத்ரூம் சீக்கிரமாக உலர்ந்துவிடும்.

- Advertisement -

வெகுநாட்களாக போகாமல் இருக்கும் கறையாக இருந்தால், அந்த இடத்தில் கொஞ்சம் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து விட்டு, அதன் மேல் கோலப் பொடியை தூவி தேய்த்தால், சுத்தமாக அழுக்கு போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை உங்கள் வீட்டு பாத்ரூமை இந்த முறைப்படி சுத்தம் செய்து தான் பாருங்களேன்! வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. வீட்டின் பாத்ரூமும் சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

இதையும் படிக்கலாமே
மனபயம், மனக்கவலை, எதிர்மறை எண்ணம் நீங்க, 5 நிமிடம் போதும்! இதோடு சேர்த்து வாழ்நாள் முழுவதும் இளமையான வாழ்க்கையையும் வாழலாம்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bathroom tiles cleaning tips in Tamil. Bathroom tiles cleaner.. Bathroom floor tiles cleaner. How to clean bathroom floor tiles. Bathroom tiles cleaning tips.

- Advertisement -