பேரிச்சம் பழம் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

benefits-of-dates-in-tamil

பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியதாகும். உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவாகவும், உடலின் பல குறைபாடுகளை நீக்கவும் உதவும் ஒரு அருமையான பழம் தான் பேரிச்சம் பழம். இந்த பேரிச்சம் பழத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

dates 2

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

எலும்புகள்
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கண்கள்

ஒவ்வொருவருக்கும் கண்பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும். உணவில் ஏற்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.

dates

- Advertisement -

இரும்புச்சத்து

பேரிச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

ஆண்மை சக்தி

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று , ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

dates 4

ஒவ்வாமை

நாம் சில குறிப்பிட்ட பொருட்களை சாப்பிடும் போதோ, சுவாசிக்கும் போதோ உடல் அதை ஏற்க முடியாமல் எதிர்வினையாற்றுவது ஒவ்வாமை எனப்படும். இந்த ஒவ்வாமை நபருக்கு நபர் வேறுபடும். பேரிச்சம் பழங்களை அதிகம் உண்டு வருபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடை

மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள், இயல்பான எடைக்கு குறைவான உடல் எடை கொண்டவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து, அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும். நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும்.

dates 3

போதை பழக்கம்

இன்று பலரும் புகையிலை, சிகரட், பீடி, மது போன்ற பல வகையான போதை வஸ்துக்களை அதிகம் உபயோகித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர். போதை பழக்கத்தில் விடுபட நினைப்பவர்கள், போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.

வயிற்று பிரச்சனைகள்

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, மாசடைந்த நீரை அருந்துவது மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தாலும் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் மூன்று வேலை சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.

dates 5

புற்று நோய்

பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளன. பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவதாக பல மருத்துவ ஆய்களை மேற்கொண்ட ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மலச்சிக்கல்

மாமிசம், மாவு பொருளால் ஆன உணவுகளை அதிகம் உண்பது, அதிகம் தண்ணீர் அருந்தாமை ஆகியவை மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
மாதுளை பழத்தின் பயன்கள்

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பேரிச்ச பழம் மருத்துவ குணங்கள் பற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் ஆன்மீக தகவல்கள் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Benefits of Dates in Tamil or Dates uses in Tamil. It is also called as pericham palam nanmaigal or pericham pazham benefits in Tamil.