எந்த நாளில் எலுமிச்சை விளக்கேற்றினால் என்ன பலன் ?

lemon deepam
- விளம்பரம்1-

கோவில்களில் பலரும் எலுமிச்சை பழம் கொண்டு விளக்கேற்றுவது வழக்கம். எதற்காக இந்த விளக்கு ஏற்றப்படுகிறது? எந்தநாளில் இந்த விளக்கை ஏற்றலாம்? எந்த திரி கொண்டு ஏற்றினால் என்ன பலன்? இப்படி பல விடயங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

lemon-diyas

தனக்குள் இருக்கும் பேராசை, கெடு எண்ணம் போன்றவற்றை கடவுள் சன்னதியில் அவருக்கு முன்பாக தூக்கி எரிந்து தூய மனிதராய் கடவுளை வழிப்படவேண்டும் என்பதற்கான ஒரு குறியீடே எலுமிச்சை விளக்கு.

- Advertisement -

எந்த நாளில் எலுமிச்சை விளக்கை ஏற்றினால் என்ன பலன்:

ஞாயிற்று கிழமை மாலை வரும் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றுவதன் மூலம் நோய்கள் விரைவில் குணமடையும்.

செவ்வாய் கிழமை மாலை வரும் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றி துர்கை அம்மனை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

lemon lamps

தனிப்பட்ட வேண்டுதங்களை உடையவர்கள் வெள்ளிக்கிழமை காலை வேலையில் வெறும் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு 2 எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது கைகூடும்.

எந்த திரி கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன்:

மஞ்சள் நிற பருத்தி துணியால் செய்யப்பட்ட திரியை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வாழ்வில் உள்ள சிக்கல் அனைத்தும் விலகும்.

lemon deepam

வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் அதிஷ்டம் பெருகும்.

தாமரை தண்டால் செய்யப்பட்ட திரி கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.

Advertisement