தேன் பயன்கள்

honey

பூமியில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் உயிர்வாழ தங்களுக்கு தேவையான உணவுகளை தங்களின் சுயமுயற்சியால் பெறுகின்றன. பூச்சியினங்களில் சில மனிதர்களுக்கு பல வகைகைளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உணவு விடயத்தில் உதவி புரிகிறது. அவற்றில் தேனீக்கள் தங்களின் கூடுகளில் சேகரிக்கும் “தேன்” பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு இயற்கை உணவாகும். தேனின் பயன்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

honey comb

தேன் பயன்கள்

உடல் எடை
உடல் எடை அதிகரிக்கும் போதே அதை கட்டுப்படுத்தாவிட்டால் பிற்காலங்களில் ஒருவருக்கு மிகுந்த ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

நோய் எதிர்ப்பு திறன்

நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் நமது உடலில் இல்லையென்றால் வீரியமில்லாத சிறு நோய்கள் கூட நமது உடலை பீடித்து மிக கடுமையான பாதிப்புகளை நமக்கு உண்டாக்க கூடும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் இருப்பது அவசியமாகும். தினமும் குழந்தைகளுக்கு தேன் சிறிதளவு கொடுத்து வருவது அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும்.

honey comb 1

- Advertisement -

சரும நலம்

நமது உடலை வெளிப்புற சூழல்களிருந்து காப்பது நமது தோல் ஆகும். ஒரு சிலருக்கு தட்ப வெப்ப சூழ்நிலைகளாலும், இன்ன பிற காரணங்களாலும் தோலில் சில இடங்களில் கரும்புள்ளிகள், தோல் உரிதல் போன்றவை ஏற்படுகின்றன. இப்படி பாதிப்பு கொண்ட இடங்களில் தேனை சிறிதளவு தடவி வந்தால் தோல் மீண்டும் பழைய தன்மையை பெறும்.

ஞாபக மறதி

தேனில் நமது ரத்தத்தில் இருக்கும் அணுக்களுக்கு புத்துணர்வை அளிக்கும் சக்தி நிறைந்துள்ளது. மேலும் நரம்புகளை பலப்படுத்தி மூளையின் செயல்பாடுகள் வேகம் பெற உதவுகிறது. தேனை அனைவரும் தினந்தோரும் சிறிதளவு சாப்பிட்டு வருவதால் மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபகத்திறனும் அதிகரிக்கும்.

honey 3

இருமல்

ஜுரம், சளி போன்ற பாதிப்புகளால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் போது நெஞ்சில் சளி சேர்ந்து கடுமையான இருமல் ஏற்படுகிறது. இந்நேரங்களில் ஒரு டீஸ்பூன் தேன் அருந்துவதால் கடுமையான இருமல் குறையும். தொண்டைகட்டு மாற்று தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

பொடுகு

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டுவதாலும், தலைமுடியை முறையாக பராமரிக்காததாலும் சிலருக்கு பொடுகு தொல்லை ஏற்படுகிறது. கிரீன் டீயில் சிறிதளவு தேன் கலந்து தினமும் பருகி வருபவர்களுக்கு பொடுகு தொல்லை கூடிய விரைவில் நீங்கும். தலைமுடியின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கும்.

honey 2

தூக்கமின்மை

மன அழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கும், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகம் கொண்டவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு இளம் சூடான பசும்பாலில் சிறிது தேனை கலந்து பருகி வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படாத ஆழமான தூக்கம் ஏற்படும்.

வாய், பற்கள் ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் உணவை நன்றாக மென்று திண்பதற்கு உதவுகிறது நமது பற்கள். பற்களில் சொத்தை ஏற்படுதல், பற்களின் வேர்கள் வலுவிழந்து பற்கள் ஆடுவது, ஈறுகளின் வீக்கம் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் திறன் தேனுக்கு உண்டு. வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் புண்களையும் தேன் ஆற்றுகிறது.

honey 1

சத்துணவு

தேன் உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். சுறுசுறுப்பு தன்மை கூடும். உடல் அழகான தோற்றம் பெறும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும்.

ஒவ்வாமை

நமது உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகள் நமது உடலுக்குள் வெளியிலிருந்து வரும் தீங்கான பொருட்களை உடலில் கலக்காமல் தடுப்பதால் ஒவ்வொமை ஏற்படுகிறது. மனிதர்களுக்கு பல வகையான ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. சிறிதளவு தேனை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த வகையான ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
பிரண்டை பயன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Benefits of honey in Tamil or Honey benefits in Tamil. It is also called as Honey uses in Tamil. Then payangal or Then maruthuva payangal in Tamil is described clearly here.