கையில் காப்பு / கருப்பு கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

kapu-kayirul

இந்து மதத்தை சார்ந்த பலரும் கையில் கயிறு கட்டி இருப்பது வழக்கம். நம் முன்னோர்கள் இந்த பழக்கத்தை நமக்கு கற்பித்துள்ளனர், நாமும் இதை அப்படியே பின்பற்றுகிறோம். அனால் இந்த கயிற்றுக்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் ரகசியம் பற்றி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

kaapu kayiru

மஞ்சள், கறுப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் நாம் கயிறு கட்டுவது வழக்கம். ஆன்மீக ரீதியாக பார்க்கையில் இந்த கயிறு நம்மை தீய சக்தியின் பிடியில் இருந்து காக்கும் தன்மை கொண்டவை. கயிறு தவிர சிலர் வெள்ளி,செம்பு, தங்கம் என தங்களின் வசதிக்கு ஏற்ப காப்பு செய்து அணிந்துகொள்வர். இதுவும் நம்மை காக்கும் ஒரு கவசமாகவே செயல்படுகிறது.

பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் அணிவதன் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறலாம். அறிவியல் ரீதியாக பார்க்கையில் இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிவுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நாம் கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெற முடியும். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை.

இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.