சிவனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் தெரியுமா ?

sivan-5
- Advertisement -

நாம் சிவபெருமானுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட பலனை அடைய முடியும். அந்த வகையில் சிவனுக்கு எந்தெந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலனை பெறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

1.எலுமிச்சம்பழச் சாறு: 

- Advertisement -

elumichai-palam

எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால்,  எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.

 

- Advertisement -

2.விபூதி அபிஷேகம்:

விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.

- Advertisement -

3.வலம்புரிச் சங்கு அபிஷேகம்:

சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

4.கரும்புச் சாறு:

கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

 

5.இளநீர்:

ilaneeer

இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.

6.பஞ்சாமிர்தம்:

பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.

7.தேன்:

தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.

8.பால்:

பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.

9.தயிர்:

thayir

தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

10.நெய்:

நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.

கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

- Advertisement -