விநாயகர் சதுர்த்தியில் விரதம் இருந்தால் கிடைக்கும் அருப்புத பலன்கள் என்ன ?

vinayagar

முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் வேண்டி பலர் மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது வழக்கம். மற்ற சதுர்த்தி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பதாலேயே பல பலன்களை அடைய முடியும். விநாயகர் சதுர்த்தி விரதத்தை எப்படி கடைபிடிப்பது. அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

pilaya

 

சூரியன் உதிப்பதற்கு முன்னாள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான ஆடை அணிந்துகொண்டு விநாயகரை நினைத்து என் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி அருள்புரிவாய் கணேசா, நான் இன்று என் சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். இதில் எந்த தடையும் வராமல் நீ காத்தருள்வாய் என்று விநாயகரிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.

பின் விநாயகரை செய்து அவருக்கு நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து நிவேதனம் செய்ய வேண்டும்.

pillayar

- Advertisement -

மேலும் தரித்திரங்கள் விலக வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஏழை எளிய மக்களுக்கு காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றில் உங்களால் முடிந்த ஏதோ ஒன்றை தானம் செய்யலாம். அதோடு அன்னதானம் சிறந்த பலன் தரும்.

 

அதன் பிறகு விரதத்தை முடித்துக்கொள்ள நினைப்போர் முடித்துக்கொள்ளலாம். சிலர் மாலை 6 மணிவரை விரதம் இருக்கவேண்டும் நினைப்பார்கள். அவர்கள் தங்கள் விரதத்தை தொடரலாம்.

pillayar

 

பலன்கள்:
விநாயகர் சதுர்த்தி விரதத்தை முறையாக கடைபிடித்தால் சங்கடங்கள் விலகி செல்லும். பெரும் புகழ் வந்து சேரும் அதோடு அனைத்து நோய்களும் நீங்கும் . மாணவர்களுக்கு கல்வி அறிவு கூடும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வீட்டில் இன்பம் பெருகும்.