உங்கள் வீட்டு பீரோ, உங்கள் வீட்டில் இன்னொரு பூஜை அறை. பூஜையறையை எப்படி பத்திரமாக, சுத்த பத்தமாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அதே போல தான் உங்கள் வீட்டு பீரோவையும் சுத்தபத்தமாக, பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். நம்முடைய வீட்டு பீரோவில் என்னென்ன பொருட்களை வைக்கலாம். என்னென்ன பொருட்களை வைக்கவே கூடாது.
பணம் தங்க தடையாக இருக்கும் அந்த பொருட்களை இப்போது வெளியில் எடுத்துப் பாருங்கள். அடுத்த மூன்று மாதத்தில் உங்களுடைய பணப் பிரச்சனைகள் தீரும். பீரோவில் நகைகள் தங்கும். பணம் தங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பதிவை படித்து பலனடையலாம்.
பீரோவில் வைக்க கூடாத பொருட்கள்
நம் வீட்டு பீரோவில் முதலில் உள்ளாடைகளை வைக்கவே கூடாது. ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடை பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடை பீரோவில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். இரண்டாவது விஷயம் நகை அடமானம், சொத்து பத்து அடமானம் வைத்த பத்திரங்களை பீரோவில் வைக்கவே கூடாது. கவரிங் நகைகளை பீரோவில் வைக்கக்கூடாது.
மேக்கப் செட், நெயில் பாலிஷ் இது போன்ற பொருட்களையும் பீரோவில் வைக்கக்கூடாது. புதுசாக வாங்கிய காலணிகளை கூட, அதாவது செருப்பைக் கூட சில பேர் பீரோவில் வைப்பார்கள். அது ரொம்ப ரொம்ப தவறு. பணம் வைக்கும் பீரோவில் இது போன்ற பொருட்கள் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
இவையெல்லாம் விட முக்கியமான விஷயம். உங்கள் வீட்டு பீரோ துருப்பிடித்து, ஆங்காங்கே உடைந்து போய் இருக்கவே கூடாது. சில பேர் வீட்டில் பீரோ பயங்கரமாக ஆட்டம் கண்டு இருக்கும். கால் கூட சரியாக தரையில் நிற்காது. அதுபோல ரொம்பவும் பழுதான பீரோவாக இருந்தால் அதை சரி செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் மாற்றி விட்டு புதுபீரோ வாங்கி விடுங்கள்.
தேவையில்லாத இன்னும் சில பல பொருட்கள் உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் அதையெல்லாம் தயவு செய்து வெளியில் எடுத்து வேற ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். பீரோ பணம், நகை, பட்டு துணி, புது துணி, தங்கம் வெள்ளி இவைகள் வைக்கக்கூடிய இடம்தான். அந்த காலத்தில் பீரோ இருக்கும் வீடு பணக்காரவீடாக இருக்கும். நிறைய பேர் வீட்டில் பீரோவே இருக்காது. பீரோவை வச்சிருந்தா அவன் பணக்காரன் அப்படின்னு சொல்லுவாங்க.
இன்று அந்த பீரோவிற்கு ஒரு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. பிறகு எப்படி பீரோவில் பணம் தங்கும். சரி பீரோவில் இருந்து இந்த பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்து விட்டோம். பிறகு அந்த பீரோவில் பணம் சேர என்ன பொருட்களை வைக்க வேண்டும். பீரோவுக்கே வாசனை தரும் பொருட்களை வைக்க வேண்டும்.
பீரோவில் துணிமணிகளுக்கு இடையே ஒரு வெள்ளை துணியில் வசம்பு கட்டி வைக்கலாம். காய்ந்த புஷ்பங்களை, வெள்ளை துணியில் கட்டி வைக்கலாம். இப்படி செய்தால் உங்கள் பீரோ வாசமாக இருக்கும். மரிக்கொழுந்து, இலையை வாங்கி மெல்லிசான காட்டன் துணியில் கட்டி பீரோவில் வைப்பதன் மூலம் பீரோவுக்கு ரொம்ப ரொம்ப பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.
பணம் வைக்கும் பெட்டியில் சின்னதாக “அதிமதுரக் கட்டை” எப்போதும் இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். இது சுக்கிரனுக்கு உரிய பொருளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அதிமதுரக் கட்டை இருக்கும் இடத்தில் பணம் காசு தங்கும்.
உங்கள் வீட்டில் வெள்ளி குங்குமச்சிமிழ் இருக்கிறதா. அதில் கொஞ்சம் குங்குமத்தை போட்டு, பீரோவுக்கு மேல் பக்கத்தில் வைத்தால் வீட்டு பீரோவில் பணம் தங்கும். பீரோ கதவை அடைத்த பிறகு பீரோவுக்கு மேல் பக்கம், நியூஸ் பேப்பர் போட்டு வச்சிருப்பீங்க இல்லையா. அந்த இடத்தில் திறந்த வெளியிலேயே குங்குமச்சிமிழ் வைக்க வேண்டும்.
ஆனால் குங்குமச்சிமிழ் அந்த இடத்திலிருந்தால், நீங்கள் வீட்டில் கவனமாக இருக்க வேண்டும். யாராவது வந்து அதை எடுத்துக்கொண்டு சென்றால் பிறகு மனம் வருத்தப்படும். அதையும் நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, இன்று நிறைவேற்றினால் கூட நல்லது.
இதையும் படிக்கலாமே: பண சுழற்சி அதிகரிக்க கோலம்
பீரோவை அழகாக சுத்தம் செய்துவிட்டு தேவையான பொருட்களை அடுக்கி வைத்து, இன்று மாலை பூஜை செய்யும் போது ஒரு சாம்பிராணி வத்தி பத்திரமாக காட்டிவிடுங்கள் போதும். உங்கள் பீரோவில் பணமும் மகாலட்சுமியும் நிரந்தரமாக வந்து தங்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.