இந்த 3 பொருட்களை கொண்டு கடவுளுக்கு அர்ச்சிக்கும் பொழுது விரைவாக கோடீஸ்வரர் ஆகிவிடலாமா? அது என்ன பொருட்கள்?

perumal-kungumam

இறைவனை எளிதாக அடைவதற்கு அர்ச்சனை ஒன்று சிறப்பான வழியாகும். இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது அவனுடைய அருளை முழுமையாக நாம் பெற முடியும் என்று வேத சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. தெரிந்தும், தெரியாமலும் இறைவனுக்கு நாம் அர்ச்சனை செய்யும் பொழுது நமக்கு அதற்குரிய பலன்கள் தாமாகவே கிடைத்து விடுமாம். அப்படி இருக்கும் பொழுது தெரிந்தே நாம் செய்யும் இந்த அர்ச்சனைகள் எவ்வளவு பலன்களை நமக்கு கொடுக்கும்? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

lingam-vilva-archanai

அப்படி இறைவனுக்கு செய்யப்படும் அர்ச்சனைகளில் நாம் இந்த 3 பொருட்களை பயன்படுத்துவது அதிக லாபத்தை தரும். இந்த அர்ச்சனைகளை தொழில் செய்யும் இடங்களில் செய்யும் பொழுது தொழில் வளம் பன்மடங்கு விருத்தியாகும். வீடுகளில் அர்ச்சிக்கும் பொழுது வீட்டில் செல்வவளம் ஆனது வேகமாக உயரும். அப்படி நாம் எந்த பொருட்களை கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை தரும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

முதலாவதாக இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பொருட்களில் மகத்துவம் மிக்க பொருளாக இருப்பது குங்குமம். எந்த ஒரு கடவுளுக்கும் குங்குமம் கொண்டு அர்ச்சிக்கும் பொழுது அதனுடைய பலன்கள் அபரிமிதமாக இருக்கும். குங்குமம் சாட்சாத் அம்பாளின் ஸ்வரூபமாக பார்க்கப்படுகிறது. குங்கும அர்ச்சனை செய்பவர்களுக்கு வாழ்வில் எத்தகைய துயரங்களும் அண்டுவதில்லை. மூலையில் உட்கார்ந்து அழுவது போன்ற சூழ்நிலை அவர்களுக்கு வரவே செய்யாது.

kungumam

108 முறை குங்குமம் கொண்டு எந்த ஒரு விக்கிரகத்திற்கும் அர்ச்சனை செய்து அந்த கடவுளுக்கு உரிய ஸ்லோகங்களை உச்சரித்தால் வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் ஒடுங்கி நல்ல அதிர்வலைகள் தழைத்து ஓங்கும். நீங்கள் கடை அல்லது தொழில் ஸ்தாபனங்களில் இருக்கும் கடவுளுக்கு காலையில் முதல் வேலையாக குங்குமத்தால் அர்ச்சனை செய்து ஸ்லோகம் வாசித்தால் அன்றைய நாள் வியாபாரம் ஓகோவென்று இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- Advertisement -

அடுத்தபடியாக அர்ச்சனைக்கு உகந்ததாக இருப்பது மலர்கள். எந்த ஒரு கடவுளுக்கும் அவரவர்களுக்கு உகந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது அதற்குரிய பலன்கள் விசேஷமானதாக இருக்கும். மகாவிஷ்ணுவிற்கும், அம்பாள், சரஸ்வதி, பிரம்மதேவர், பார்வதிதேவி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோருக்கு தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது அதற்குரிய பலன்களும் அபரிமிதமானவை. தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலட்சுமியை கடவுளுக்கு அர்ச்சிக்கும் பொழுது செல்வவளம் ஆனது மென்மேலும் சிறக்கும்.

lotus

வீட்டில் இருக்கும் பூஜை அறையிலும், வியாபாரம், தொழில் செய்யும் இடங்களிலும் நீங்கள் வைத்திருக்கும் சுவாமி படத்திற்கு தாமரை மலர் ஒன்றை அர்ச்சித்து அதற்குரிய சுலோகங்களும் உச்சரித்து வந்தால் பணப் பிரச்சினை என்பது உங்கள் வாழ்க்கையில் வரவே வராது. எத்தனையோ கடன் தொகைகள் உங்களுக்கு இருந்தாலும் சட்டென நிவர்த்தி ஆகிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உங்கள் இருக்கைக்கு அருகே சுவாமி படத்தை வைத்து அதற்கு தினம்தோறும் தாமரை மலர் கொண்டு அர்ச்சித்து வந்தால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள்.

five-rupee-coins

அடுத்தபடியாக இருப்பது நாணயங்கள் ஆகும். நாணயங்கள் கொண்டு அர்ச்சிக்கும் பொழுது இறைவனுடைய பரிபூரண அருளை நாம் பெற்று பயனடைய முடியும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை முறையாக ஒரே மாதிரி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜையின் பொழுது குபேரன் அல்லது மஹா லட்சுமி தேவிக்கு நாணயங்களைக் கொண்டு அர்ச்சித்து வந்தால் செல்வமானது கிடுகிடுவென உயரும். பொன் நகைகள், வைர, வைடூரியங்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுடைய கனவும் நிறைவேறும்.

coin

தொழில் செய்யும் இடங்களில் நாணயங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது தொழில் விருத்தி அடையும். அதிலும் குபேரன் நாணயம், லட்சுமி காசு ஆகியவற்றைக் கொண்டு அர்ச்சிக்கும் பொழுது கூடுதல் சிறப்பு பலன்களை பெறலாம். குங்குமம், நாணயம், மலர்கள் ஆகிய மூன்றையும் கொண்டு அர்ச்சிக்கும் பொழுது நீங்கள் செல்வந்தராவது உறுதி.