கஷ்டங்கள் தீர 12 ராசிக்குமான இரண்டே வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ரகசிய வழிகள்.

vetrilai-astrology

வெற்றிலைக்கு ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. இதில் அடங்கி இருக்கும் கார்ப்புத்தன்மை எத்தகைய சளி, இருமலையும் போக்க வல்லது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு வெற்றிலைச் சாற்றை ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் சளித் தொல்லையே இருக்காது. இரண்டு வெற்றிலையை வதக்கி சாறெடுத்து இறுதுளி மூக்கில் விட்டால் தலையில் கோர்த்து இருக்கும் நீர் முழுவதும் நீங்கி தலைபாரம் நிமிடத்தில் ஓடி போய்விடும். ஊற வைத்த சிவப்பரிசியுடன் இரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். வெற்றிலையில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். அனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும் என்று இப்பதிவில் காணலாம்.

vetrilai

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று பூஜையில் இரண்டு வெற்றிலை வைத்து அதன் மீது மாம்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்து வெற்றிலையை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி கொள்ளலாம். மாம்பழத்தை சாப்பிட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் கஷ்டங்கள் உங்களை நெருங்காது. கவலைகள் பறந்தோடும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் ராகு பகவானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு சென்று இரண்டு வெற்றிலையுடன் 9 மிளகு வைத்து வழிபாடு செய்து வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் அதனை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடன் தொல்லை நீங்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் புதன் கிழமை அன்று உங்களது குலதெய்வத்திற்கு இரண்டு வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் தீரும். குலதெய்வ அருள் கிட்டும். சங்கடங்கள் பறந்தோடும். நிம்மதி கிடைக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் மாதுளம்பழம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கி நலம் கிட்டும். மனத்தெளிவு உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் வாழைப்பழம் வைத்து பூஜை செய்து அதனை உட்கொண்டால் தீராத துன்பங்கள் தீரும். குழம்பிய குட்டை போன்று இருந்த உங்களது மனம் தெளிவடையும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து இரண்டு வெற்றிலையுடன் 27 மிளகு வைத்து உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வத்தை பூஜித்து இரண்டு வெற்றிலையுடன் கிராம்பு வைத்து வழிபாடு செய்து பின்னர் அதனை உட்கொண்டால் பிரச்சனைகள் நீங்கி இல்லம் அமைதி அடையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையை துதித்து இரண்டு வெற்றிலையுடன் பேரீச்சம் பழம் வைத்து வழிபட்டு உட்கொண்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையை வெறுத்தவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கிழமை அன்று முருகனுக்கு இரண்டு வெற்றிலையுடன் சிறிது கற்கண்டு வைத்து வழிபட்டு அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் அச்சுவெல்லம் சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் துன்பங்கள் நீங்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் நெய் சிறிது சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். மனதில் உள்ள பாரங்கள் இறங்குவதை உணர்வீர்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்கள் ஞாயிரு அன்று இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் சர்க்கரை சிறிது வைத்து பூஜை முடிந்ததும் அதனை உட்கொள்வதால் சகல பிணிகளும் தீரும். நிம்மதி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு வாசல் கதவு இப்படி இருந்தால், கஷ்டத்தில் இருந்து உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 12 rasi pariharam Tamil. 12 rasi pariharangal Tamil. Vetrilai ragasiyam in Tamil. Vetrilai pariharam in Tamil.