பணத்தை வசியம் செய்யும் வெற்றிலை பொட்டலம். சித்தர்கள் அருளியது.

vetrilai-cash

சித்தர்கள் அருளிய மகா ரகசியங்கள் பல உலகிற்கு தெரியாமலே அழிந்து போய் விட்டது. எஞ்சிய சிலவற்றை சரியான முறையில் செயல்படுத்தப்படுவதில்லை. பணத்தை எப்படி வசியம் செய்வது? வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்? வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாக என்ன செய்ய வேண்டும்? இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு வழிமுறைகள் இருக்கின்றது. அதனை சரியான முறையில் முழு இறை நம்பிக்கையுடன் செய்தால் கட்டாயம் அதன் பலனை பெற முடியும்.

vetrilai

வெற்றிலையை வைத்து பணத்தை வசியம் செய்வது எப்படி? என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக கிடைக்கக் கூடிய மூலிகைகள் தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயங்களில் இறைவனின் சக்தி நிலைக்க பலதரப்பட்ட வாசனை பொருட்கள் சேர்க்கப்படுகின்றது. அபிஷேக, ஆராதனைகளின் போது இயற்கையாக கிடைக்கக் கூடிய வாசனை திரவியங்கள் பயன்படுத்தபடுவது எதனால்? இது போல் இருக்கும் இயற்கை வாசனை பொருட்களுக்கு ஒரு சக்தி இருக்கின்றது. முகர்ந்து பார்த்தாலே உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடிகிறது அல்லவா? பணத்தை ஈர்க்க லக்ஷ்மி தேவியை குளிர்விக்க வேண்டும். அவரின் அருள் இன்றி எதுவும் நிலைக்காது.

ஒரு முற்றிய நல்ல வெற்றிலையை காம்புடன் எடுத்து சுத்தம் செய்து விரித்து வைத்து கொள்ளுங்கள். மூன்று என்ற எண்ணிக்கையில் கொட்டைபாக்கு வைத்து கொள்ளுங்கள். அதனுடன் புனுகு, அரகஜா, இந்துப்பு அரை ஸ்பூன் அளவில், அபிஷேக பொடி சிறிது, மஞ்சள் கிழங்கு ஒன்று இவற்றுடன் 5 என்ற எண்ணிக்கையில் பச்சை கற்பூரம் மற்றும் தர்பை புல். தர்பையை வெற்றிலை கொள்ளும் அளவிற்கு சிறிது சிறிதாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

folding-vetrilai

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சக்தி உள்ளது. சித்தர்களால் கூறப்பட்ட தாந்த்ரீக வசிய முறைகளில் உள்ள குறிப்புகள். தெய்வீக அருளை நாம் நம் வீட்டிற்குள் கொண்டு வரக்கூடிய வகையில் இருக்கும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு உணவு போட்டால் போல் நான்கு புறமும் மடித்து விட வேண்டும். அதன் காம்பு பகுதி மேல தெரிய வேண்டும். உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியே சிதறிவிடாதவாறு பார்த்து கொள்ளுங்கள். மடித்த பின் ஒரு மஞ்சள் தடவிய நூல் கொண்டு நான்கு புறமும் சுற்றி கட்டி கொள்ள வேண்டும்.

- Advertisement -

Pooja room

இந்த வெற்றிலை பொட்டலத்தை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதை வைத்த பின் நீங்கள் பூஜை செய்யும் போது உங்கள் இல்லத்தில் நல்ல தேவைதைகள் வந்து தாங்கிக் கொள்ளும். லக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்வாள். வியாபாரம் செழிக்க இந்த பொட்டலத்தை வியாபார ஸ்தலத்தில் உள்ள பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். திருமண தடை உள்ளவர்கள் தங்களது தலையணைக்கு கீழ் வைத்து கொள்ளலாம். தலையணையின் கீழ் வைப்பவர்கள் அப்படியே வைக்காமல் ஒரு சிறிய பாலிதீன் பைக்குள் போட்டு கட்டி அதன் மேல் சிறு துளையிட்டு வைத்து கொள்ளுங்கள். இல்லையேல் வெற்றிலை காய்ந்து போனால் உதிர்ந்து விடும். இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம். அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. சகல ஐஷ்வரியமும் இந்த எளிய தாந்த்ரீக பரிகாரம் மூலம் அடையலாம்.

இதையும் படிக்கலாமே
இப்பிறவி பாவங்களை நீக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம். தெரியாத பக்கங்கள் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vetrilai thanthirigam in tamil. Spiritual significance of betel. Betel leaf spiritual. Vetrilai pariharam in tamil.