- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாரா கடனை வர வைக்கும் பைரவர் வழிபாடு

வாரா கடனை வர வைக்கும் பைரவர் வழிபாடு

- Advertisement -

கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த இடத்தில் இருந்து அந்த பணம் வராததால் குடும்பத்திலும் மனதிலும் பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகி நிம்மதியற்ற சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காலபைரவரை எந்த முறையில் வழிபட்டால் அவர்கள் கொடுத்த பணம் திரும்ப வந்து சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பைரவர் வழிபாடு

கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பலரும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து விட்டு திரும்பவும் அந்த பணத்தை பெறுவதற்காக போராடிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். கொடுத்த பணத்தை வாங்கியவர்கள் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவர்களிடம் இருந்து கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதற்கு என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதில் இரண்டு குறிப்புகள் உள்ளது. ஒன்று பரிகாரம் மற்றொன்று வழிபாடு. இவை இரண்டையும் ஒருசேர செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் வராத கடனும் வந்து சேரும். முதலில் பரிகாரத்தை வீட்டில் செய்து விடுவோம். இதற்கு ஒரு வெள்ளை நிற துணி வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சிறிதளவு கல் உப்பு, சிறிதளவு வெந்தயம், சிறிதளவு கருப்பு எள் இவை மூன்றையும் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். அந்த பொடியை வெள்ளைத் துணியில் வைத்து கட்டி மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த மூட்டையை உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். அதை மூட்டையாகவும் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டும் வைத்துக் கொள்ளலாம். இதை மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதில் இருக்கக்கூடிய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக பைரவர் வழிபாட்டை பற்றி பார்ப்போம். இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் ராகு காலத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அருகில் இருக்கக்கூடிய சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு இருக்கக்கூடிய பைரவருக்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு மிளகுகளை 27 என்ற எண்ணிக்கையில் ஒரு வெள்ளை துணியில் போட்டு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை நல்லெண்ணெயில் போட்டு திதியாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும் தீபம் ஏற்றிய பிறகு இந்த விளக்கை சுற்றி குங்குமத்தால் ஒரு வட்டம் போட வேண்டும். இப்படி போட்டுவிட்டு காலபைரவரிடம் உங்களுடைய வராத கடனும் வந்து சேர வேண்டும் என்ற வேண்டுதலை மனதார வைத்துக்கொண்டு காலபைரவரை 9 முறை வலம் வர வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் கால பைரவரின் அருளால் ஏமாற்ற நினைப்பவர்களாக இருந்தாலும் சரி பணத்தை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி விரைவிலேயே உங்களைத் தேடி வந்து பணத்தை தந்து விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: நன்மைகள் ஏற்பட விநாயகர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தையும் கால பைரவரின் வழிபாட்டையும் முழு மனதோடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்