பரணி நட்சத்திர தோஷங்கள் நீங்க இவற்றை செய்தால் பலன் அதிகம்

sukran

மனிதர்கள் அனைவருமே 12 ராசிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் 27 நட்சத்திரங்களுக்குட்பட்டே பிறக்கின்றனர். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வகையான குணாதிசயங்களை அந்நட்சத்திரத்தில் பிறக்கின்றவர்களுக்கு கொடுக்கிறது. வகையில் நட்சத்திர வரிசையில் இரண்டாவதாக வரும் “பரணி நட்சத்திரம்” பற்றியும், இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி, பல சிறப்பான பலன்கள் ஏற்படா செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sukran

27 நட்சத்திரங்களில் இரண்டாவதாக வரும் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும். பரணி நட்சத்திரத்தின் நவகிரகங்களில் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். செல்வ வளத்திற்கும், சுகத்திற்கும் அதிபதியான சுக்கிரனின் நட்சித்திரமாக இருந்தாலும், பரணி நட்சத்திரக்காரர்கள் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என கூறமுடியாது. இவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெற கீழ்கண்ட பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து வந்தால் நிச்சயமான பலன்கள் உண்டாகும்.

சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கஞ்சனூர் கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் நட்சத்திர தோஷம் நீங்கும். உங்கள் உறவுகளில் திருமணம் வயதுள்ள பெண்களுக்கு புதுப்புடவை, வாசனை திரவியங்கள் போன்றவற்றை பரிசாக அளிப்பதால் சுக்கிரபகவானின் ஆசிகள் உங்களுக்கு கிடைத்து உங்களின் தோஷங்கள் நீங்கும்.

feeding birds

நீங்கள் எந்த ஒரு காரியத்திற்காகவும் வெளியில் செல்லும் போது சிறிது சர்க்கரை அல்லது இனிப்பை சாப்பிட்டு வெளியே செல்வதால் காரியசித்தி உண்டாகி நன்மையான பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் இளம் பச்சை வண்ண உடைகளை அணிந்து கொள்வது உங்களுக்கு பொருளாதார ரீதியான அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிக்கும். வசதி உள்ளவர்கள் தரமான வைரத்தை ஒரு வெள்ளி மோதிரத்தில் பதித்து வளர்பிறை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை வேளையில் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருப்பதும், நாய்கள், பறவைகளுக்கு உணவளிப்பதும் உங்களின் தோஷங்களை போக்கி நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
வறுமை ஏற்படாதிருக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bharani nakshatra dosha pariharam in Tamil. It is also called as Bharani nakshatra in Tamil or Sukra bhagavan nakshatras in Tamil or Bharani natchathiram athipathi in Tamil.