இந்த உலகத்தில் என்ன வரம் வேண்டும் உங்களுக்கு? அம்பாளிடம் இப்படி கேட்டுப் பாருங்கள். கேட்டது உடனே கிடைக்கும்.

bhuvaneshwari-amman

வேண்டிய வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்குவதே அந்த சக்தி தேவியின் பார்வையினால் தான். ஆயிரம் கண்களை கொண்டு தன்னுடைய பக்தர்களை குழந்தைகளாக பாவித்து காத்துவரும் அம்பாளை மனம் உருகி நம்பிக்கையோடு வழிபாடு செய்தாலே போதும். வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும். இந்த புவனத்தை ஆளக்கூடிய புவனேஸ்வரி வழிபாட்டினை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புவனம் என்பது இந்த பூலோகத்தை குறிக்கின்றது. இந்த பூலோகத்தில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்ற அந்த சக்தி தேவிக்கு வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் இப்படி பூஜை செய்யது பாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றங்கள் தெரியும்.

irukkankudi-amman

நமக்கு வேண்டிய வரங்களை அந்த அம்பாள் தந்து கொண்டே தான் இருக்கின்றாள். ஆனால் நம்முடைய தேவைகள் பூர்த்தி அடையும் போது, அடுத்த தேவைகள் மீண்டும் உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் நம்முடைய மனது நிறைவடையாத காரணத்தினால் அந்த ஆண்டவன் நமக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது நமக்கு போதுமானதாக அமையவில்லை.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்லுவார்கள். ஆனால் இன்று மனிதர்கள் எதைத்தான் போதும் என்று நினைக்கிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

mariyamman

முதலில் மனதை நிறைவு செய்துகொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும். கிடைத்ததை வைத்து திருப்தி அடைந்து, நம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டும். இதற்காக தேடல் இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இருப்பினும் மன திருப்தி அடையாமல் எதுவுமே நமக்கு நிறைவடையாது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை தினத்தில் காலை பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, கொஞ்சமாக வாசனை மிகுந்த குங்குமத்தை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் சக்தி தேவியின் திருவுருவப் படத்திற்கு, அதாவது ஏதாவது ஒரு அம்மனின் திருவுருவ படத்திற்கு குங்கும அர்ச்சனை செய்யவேண்டும். மனமுருகி உங்களுடைய வேண்டுதலை அம்பாளிடம் வைத்து சக்தி தேவியை மனதார நினைத்து ‘ஓம் புவனேஸ்வரி தாயே போற்றி!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்களுடைய வெள்ளிக்கிழமை பூஜை செய்து பாருங்கள்.

anuman-amman

இந்த உலகத்தில் உங்களுக்கு என்ன சுகபோக வாழ்க்கை வேண்டுமோ, எந்த சொத்து சுகம் வேண்டுமா, உங்களுடைய தகுதிக்கு ஏற்ப எந்த வரங்களை வேண்டுமென்றாலும் மனமுருகி அந்த தாயிடம் கேட்கலாம். நிச்சயமாக இந்த பிரபஞ்சம் உங்களுடைய வேண்டுதலை கூடிய விரைவிலேயே நிறைவேற்றும்.

amman-1-1

புவனத்தை காக்கும் புவனேஸ்வரி தாயின் நாமத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு உத்வேகம் வந்து, நம்முடைய வாழ்க்கையில் நாமே நினைக்காத சில காரியங்களை செய்து, நமக்கு தேவையான விஷயங்களை நாமே சாதித்துக் கொள்ளும் அளவிற்கு மன உறுதியும் தைரியமும் நம்மிடம் வந்து விடும். புவனேஸ்வரி தாயின், பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். புவனேஸ்வரி சக்தி பெயரை உச்சரித்து கொண்டே இருங்கள். இந்த புவனம் நீங்கள் கேட்ட வரங்களை வாரி வழங்கி விடும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.