செழிப்பான வாழ்வு தரும் புவனேஸ்வரி காயத்ரி மந்திரம்

bhuvaneswari-compressed

தற்போதைய உலகத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக பணம் மட்டுமே இருக்கிறது. இந்த பணம் ஒருவருக்கு அவரின் உழைப்பிற்கேற்ற வகையில் இருந்தாலும், எல்லோருக்குமே போதுமான அளவில் இல்லாததால் சிலர் தங்களின் தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. மற்ற சிலர் தங்களுக்கென்று சொந்தமாக நிலம், வீடு போன்ற சொத்துகள் வாங்க வேண்டும் என்று விருப்பங்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் தீர்வாக இருக்கும் “புவனேஸ்வரி காயத்ரி மந்திரம்” இதோ.

Amman adi perukku

புவனேஸ்வரி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயண்யை வித்மஹே புவனச் வர்யை
தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்

புவனேஸ்வரி அம்மனை போற்றும் புவனேஸ்வரி காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், காலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாக பூஜையறையில் புவனேஸ்வரி அம்மன் படத்திற்கு வெல்லம், தேன் போன்ற ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் வைத்து இம்மந்திரத்தை 27 மமுறை அல்லது 108 முறை துதித்து வணங்கினால் உங்களின் பொருளாதார நிலை மேன்மையடையும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைக்க முடிகிற நிலை உண்டாகும். புதிய சொத்துகள் வாங்கும் அளவு செல்வ சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

amman

சிவபெருமானின் மறுபாதியான சக்தி தேவி உலகங்கள் அனைத்தையும் ஆள்கிறாள். பார்வதியாகிய அந்த சக்தி தேவி பல ரூபங்கள் கொண்டவள் அதில் ஒன்று தான் அன்னை புவனேஸ்வரி வடிவமாகும். தென்னகத்தில் அதிகம் வழிபடப்படும் சப்த கன்னியர்கள் எனப்படும் 7 கன்னி தெய்வங்கள் இந்த புவனேஸ்வரி அம்மனின் பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியவர்கள் என சாஸ்திரங்கள் கூறுகின்றது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த இந்த புவனேஸ்வரி தேவியின் இம்மந்திரத்தை துதிப்பவர்களுக்கு எல்லா நலமும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
நவகிரக விநாயகர் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bhuvaneshwari gayatri mantra in Tamil. It is also called as Bhuvaneshwari mantra in Tamil or Bhuvaneshwari stuti in Tamil or Bhuvaneshwari devi sloka in Tamil or Bhuvaneshwari amman manthiram in Tamil.