- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இப்படி அழுக்கான வாட்டர் கேன் சுத்தம் செய்ய, 2 நிமிடமும் இந்த ஐடியாவும் தெரிந்தாலே போதும்.

இப்படி அழுக்கான வாட்டர் கேன் சுத்தம் செய்ய, 2 நிமிடமும் இந்த ஐடியாவும் தெரிந்தாலே போதும்.

- Advertisement -

நிறைய பேர் வீட்டில் சுத்தம் செய்ய முடியாமல் இப்படிப்பட்ட பெரிய பெரிய வாட்டர் கேன்கள் இருக்கும். 20 லிட்டர் வாட்டர் கேன், அல்லது 10 லிட்டர் வாட்டர் கேன் என்று நிறைய கேன்களை வைத்திருப்போம். ஆனால் அந்த கேன் பார்ப்பதற்கு உள்ளே பாசிப்படைந்து ரொம்பவும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிலபேர் இதற்கு ஃப்ரெஷ் வைத்து எல்லாம் சுத்தம் செய்து ட்ரை பண்ணுவாங்க. அப்படி இருந்தும் உள்ளே இருக்கும் அழுக்கு போகவே போகாது. ஆனால் இந்த சிம்பிள் மெதட் ட்ரை பண்ணி பாருங்க. 100% ரிசல்ட் கிடைக்கும்.

water-can1

முதலில் இப்படி அழுக்காக இருக்கக்கூடிய ஒரு வாட்டர் கேன் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 1 ஸ்பூன் ஊற்றி கொள்ளுங்கள். அடுத்து 3 டம்ளர் தண்ணீரையும் ஊற்றி, முதலில் இதை நன்றாக குலுக்கி கலந்து விடுங்கள். அதன் பின்பு இரண்டு கைப்பிடி அளவு அரிசியை போட்டு வாட்டர் கேனை உங்கள் கையில் எடுத்து நன்றாக குலுக்க வேண்டும். உங்களால் எவ்வளவு பிரஷர் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக குலுக்கி விடுங்கள்.

- Advertisement -

அரிசியும் சோப்பு தண்ணீரும் கேனுக்கு உள்ளே எல்லா பக்கங்களிலும் படவேண்டும். இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும். உள்ளே படிந்திருக்கும் பாசியும் மஞ்சள் நிற கரையும் சுத்தமாக நீங்கி இருப்பது. அதன் பின்பு உள்ளே இருக்கும் அழுக்கு தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, நல்ல தண்ணீரை நன்றாக ஊற்றி அலம்பி கீழே கொட்டிவிட்டால் வாட்டர் கேன் பளிச் பளிச்சென்று இருக்கும். இதே போல சின்ன வாட்டர் கேன் சுத்தம் செய்யவும் நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

அரிசி, ரேஷன் அரிசி ஆக இருந்தாலும் அதை இப்படி சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி அரிசியை போட விருப்பம் இல்லை என்றால் இரண்டு கைப்பிடி கல் உப்பு போட்டு இப்படி கழுவினாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

அடுத்து இன்னொரு சின்ன கிளீனிங் டிப்ஸ். நிறையபேர் வீட்டில் பாத்ரூமில் உப்பு கரை படிந்த பக்கெட் இருக்கும். அதை சுத்தம் செய்ய எவ்வளவு போராடிப் பார்த்தாலும் அந்த கரை போகவே போகாது. இதற்கு ஒரு சின்ன டிப்ஸ் இருக்கு. சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் ஹார்பிக் ஊற்றிக் கொள்ளுங்கள். பழைய பெயிண்ட் அடிக்கக்கூடிய பிரஷ் ஏதாவது இருந்தால் அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

water-can2

பிரஷில் ஹார்பிக்கை தொட்டு பட்கெட் முழுவதும் பெயிண்ட் அடிப்பது போல ஹார்பிக்கை தடவி விட்டுவிடுங்கள். பக்கெட் அப்படியே 20 நிமிடங்கள் ஹார்பிக்கில் ஊறட்டும். அதன் பின்பு ஸ்டீல் நார் போட்டு தேய்த்து கழுவினால் பக்கெட் பல பலனு சுத்தமாகி இருக்கும். இந்த இரண்டு டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்லா ஒர்க் அவுட் ஆகும்.

சற்று முன்