1, 10, 19, 28 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-palan

1, 10, 19, 28 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்? நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் அவரவர் பிறந்த தேதி ஏற்ப ஆதிக்கம் செய்கிறது. கூட்டு எண் ஒன்றாம் தேதி பிறந்தவர்களுக்கான கிரகணம் சூரியன். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை, இவைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

horoscope

குணம்

உங்களின் கிரகணம் சூரியன் என்பதால் அந்த சூரியனின் குணாதிசயங்கள் உங்களிடம் வெளிப்படும். எதையும் எதிர்த்து போராடக்கூடிய தன்மையை உடையவர்களாக இருப்பீர்கள். சூரியனை சிலசமயங்களில் மேகம் சூழ்ந்தாலும் அது சிறிது நேரத்தில் விலகி சூரியனின் வெளிச்சம் பிரகாசமாகப்படும். அதே போன்று உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து சுலமாக பிரச்சனையில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். நீங்கள் மன தைரியம் உடையவர்களாக செயல்படுவீர்கள். அதே சமயத்தில் அன்பிற்கும், பண்பிற்கும், மரியாதைக்கும் உங்களிடம் குறை இருக்காது. நீங்களாக யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டீர்கள். உங்களிடம் சண்டைக்கு வருபவர்களை விடவும் மாட்டீர்கள். மற்றவர்கள் உங்களை சுலபமாக ஏமாற்ற முடியாது. அந்த சூரியனை போன்ற பிரகாசமான வெள்ளை உள்ளத்தை கொண்ட நீங்கள் உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வீர்கள். உங்கள் கோபத்தை சரியான இடத்தில் மட்டும் வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் செய்த தவறை தட்டிக் கேட்பீர்கள். அதேசமயம் நீங்கள் ஏதாவது தவறு செய்தால் முதலில் வந்து மன்னிப்பு கேட்பீர்கள்.

தொழில்

astrology

- Advertisement -

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 1 என்பதற்கு இணையாக எதிலும் நீங்கள் முதலாவது இடம்தான். இந்த தேதியில் பிறந்தவர்கள் அரசு வேலைவாய்ப்பில் உள்ளவர்களாக இருப்பார்கள். உங்கள் வருமானத்திற்கான வழிகளை நீங்களே தேடிக் கொள்வீர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் நீங்கள் உயர்ந்த பதவியில் தான் இருப்பீர்கள். உங்களுக்கான எதிர்ப்புகளைத் தாண்டி நீங்கள் தொழிலிலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ ஏற்படும் தேவையற்ற எதிர்ப்புகளை எதிர்த்து சமாளித்து விடுவீர்கள்.

நண்பர்கள்

அதிகார குணம் கொண்டவர்களாக நீங்கள் இருப்பதால் உங்களை அனுசரித்துச் செல்பவர்களை மட்டுமே நீங்கள் நண்பராக வைத்துக் கொள்வீர்கள். 2, 9, 3 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உங்களை அனுசரித்து கொள்வார்கள். ஆனால் 4, 5, 7, 8 இந்த தேதியில் பிறந்தவர்கள் உங்களிடம் நட்பு வைத்துக்கொள்ள முடியாது.

உடலமைப்பு

நல்ல பலசாலியான தோற்றம் தான் உங்களுக்கு இருக்கும். தவறினை தட்டி கேட்கும் அளவிற்கான பலம் உங்களிடத்தில் இருக்கும். கம்பீர கட்டமைப்பினை உடைய நீங்கள், பார்க்கும் பார்வை சாந்தமாக இருக்கும். பெரும்பாலும் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பதால், கண்ணாடி அணிந்து இருப்பார்கள். இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு உடல் உஷ்ணமாக இருக்கும். இதனால் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டு வருவது நல்லது.

astrology

இல்லற வாழ்க்கை

நீங்கள் அழகான பொருட்களை ரசிக்கும் தன்மை உடையவர்களாக இருப்பதால் உங்கள் இளம் வயதில் அடிக்கடி காதலில் விழுந்து இருப்பீர்கள். உங்களுக்கு காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதையும் வெளிப்படையாகவும், அதிகாரத்தோடும் பேசுவதால் உங்களை விட்டுக் கொடுத்துப் போகும் கணவர் அமைந்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் தென்றல் வீசும். தனிமை விரும்பியான நீங்கள் கூட்டுக் குடும்பத்தை விரும்ப மாட்டீர்கள். ஆனால் சொந்த பந்தங்களுக்கு ஆதரவாக நிற்பீர்கள்.

அதிர்ஷ்டம் கொடுப்பவை

அதிர்ஷ்ட தேதி -1, 10, 19, 3, 12, 21, 30
அதிர்ஷ்ட நிறம்-இளஞ்சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட திசை-கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை-ஞாயிறு
அதிர்ஷ்ட கல்-மாணிக்கம்
அதிர்ஷ்ட தெய்வம்-சிவன்

இதையும் படிக்கலாமே
எந்த ராசிக்காரர்கள் எந்த சுலோகம் சொன்னால் சிறப்பான வாழ்வு பெறலாம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.