6, 15, 24 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-rasi-palan

6, 15, 24 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 6 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் சுக்கிரன். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

numbers

குணம்
தன்னலமற்ற குணத்தை கொண்ட நீங்கள் எவ்வளவு விலை கொடுத்தாலும் குறுக்கு வழியில் செல்ல மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை நேர்மையான வழியில் தான் சமாளிப்பீர்கள். கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவியை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். தந்நலமாக எதையும் யோசிக்க மாட்டீர்கள். பொறுமையான குணம் கொண்ட நீங்கள் நேர்மை தவறி நடப்பவர்களை பார்க்கும்போது பொங்கி எழுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை புகழவேண்டும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். எதையும் சகித்துக் கொள்ளும் தன்மையை கொண்ட நீங்கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உங்களின் சமயோசித புத்தி அனைவராலும் பாராட்டதக்கதாக இருக்கும். உங்கள் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். ஆனால் சில சமயங்களில் நீங்கள் பேசுவது அடுத்தவர்களின் நெஞ்சில் நெருப்பை வாரி கொட்டியது போல இருக்கும். அந்த அளவிற்கு எடுத்தெறிந்து பேசக்கூடிய குணமும் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு பிடிக்காதவர்களை உங்கள் பேசினாலே கட்டுப்படுத்தி, அவர்கள் முகத்தில் கரியைப் பூசி விடுவீர்கள். பிடிவாத குணம்கொண்ட நீங்கள் யாருக்கும் அடி பணிந்து போக மாட்டீர்கள். உங்களின் நண்பர்கள் குறுக்கு வழியில் சென்றால் கூட அதைத் தடுத்து நீங்கள் நியாயத்தை நிலை நாட்ட தான் செயல்படுவீர்.

தொழில்
கலைத்துறை சார்ந்த, சினிமா, நடனம், சங்கீதம், இசை இது போன்ற தொழில் செய்பவர்களாக இருப்பீர்கள். அரசாங்க பதவியில் இருப்பவர்களாக இருந்தால் உயர்பதவியில் இருப்பீர்கள். பெண்களுக்கு அழகு படுத்துவது சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அதாவது அழகு நிலையம் வைப்பது, பெண்கள் உபயோகப்படுத்தும் அழகுப் பொருட்களை விற்பது, அழகான ஆடைகளை விற்பது போன்றவற்றை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். நறுமணப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்தால் முன்னேற்றம் அடைவீர்கள்.

numbers

நண்பர்கள்
புதியதாக நண்பர்கள் கிடைப்பதில் கஷ்டங்கள் இருந்தாலும், நண்பர்கள் கிடைத்தவுடன் நட்பானது இனிமையான நட்பாக அமையும். உங்களுக்கு பிடிக்காதவர்களை நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி வைப்பீர்கள். கூட்டு எண் 5, 4, 7, 8 இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் நீங்கள் நண்பர்களாக பழகுவீர்கள். கூட்டு எண் 1, 2 இந்த எண்ணில் பிறந்தவர்களால் உங்களிடம் நட்புறவு வைத்துக்கொள்ள முடியாது.

- Advertisement -

உடலமைப்பு
குள்ளமான தோற்றத்தை உடைய நீங்கள் சிறிது குண்டாகத்தான் இருப்பீர்கள். உங்கள் கண்கள் அமைதியை வெளிப்படுத்தும். உங்களை அடுத்தவர்களிடம் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். கூட்டு எண் 6ல் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி, காய்ச்சல் தொல்லை வரும்.

Nakshatra

இல்லற வாழ்க்கை
உங்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷப்படும்படியாக தான் இருக்கும். உங்களுக்கு பிடித்தவர்களை நீங்கள் மணமுடித்திருப்பீர்கள். தெய்வத்தின் மீது ஈடுபாடு கொண்ட உங்கள் குடும்பமானது மகிழ்ச்சியுடன் இருக்கும்.

astro wheel 1

அதிர்ஷ்ட தேதி -6, 15, 24,9
அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை
அதிர்ஷ்ட திசை-தெற்கு
அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி
அதிர்ஷ்ட கல்-வைரம்
அதிர்ஷ்ட தெய்வம்-லட்சுமி

இதையும் படிக்கலாமே
5, 14, 23 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.